த.வெ.க.வில் இணைந்த முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்.. விசில் போடு நண்பா!

Former AIADMK Minister Joins TVK : அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார்.

Published on: October 1, 2026 at 11:44 am

தாராபுரம், அக்.1, 2026: அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் அங்கு சென்றிருந்த நிலையில், அவரது முன்னிலையில் செம்மலை கட்சியில் இணைந்தார். அவருக்கு விஜய் கட்சித் துண்டு அணிவித்து வரவேற்றார்.

செம்மலை, அதிமுகவில் நீண்டகாலம் பணியாற்றிய மூத்த தலைவர் ஆவார். அவர் நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2001-06 காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து விலகுவதாக செம்மலை அறிவித்திருந்தார். கட்சியின் நிலை மற்றும் அமைப்பை வலுப்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று அவர் அப்போது அதிருப்தி தெரிவித்திருந்தார். அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது அவர் தவெகவில் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க : மீண்டும் விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ்.. 5 மணி நேரம் சோதனை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com