இந்திய மகளிர் ஹாக்கியில் புதிய வீராங்கனைகளுக்கு வாய்ப்பு.. சலிமா பேட்

Captain’s Confidence : இந்திய மகளிர் ஹாக்கியில் புதிய வீராங்கனைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என ஹாக்கி கேப்டன் சலிமா பேட் தெரிவித்துள்ளார்.

Published on: May 17, 2026 at 3:02 pm

Updated on: May 17, 2026 at 3:03 pm

புதுடெல்லி, மே 17, 2026: இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் சலிமா டேட், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான அணி கடுமையாக உழைக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும், அவர், உடல் தகுதி, ஒழுக்கம், மற்றும் இளம் வீராங்கனைகளின் பங்களிப்பு ஆகியவை அணியின் வெற்றிக்கு முக்கியம் என வலியுறுத்தினார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மே 21 முதல் ஜூன் 3 வரை நடைபெறுகிறது; இந்தப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பெர்த் ஹாக்கி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இது குறித்து பேசிய சலிமா பேட், “எந்த அணியையும் வெல்ல உடல் தகுதி அவசியம். மூத்த மற்றும் இளம் வீராங்கனைகள் அனைவரும் கடுமையாக பயிற்சி செய்கின்றனர். புதிய வீராங்கனைகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு, அவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். ஒழுக்கம், பயிற்சியாளர் வழிகாட்டுதல், மற்றும் தனிப்பட்ட பலவீனங்களைச் சரிசெய்தல் முக்கியம்” என்றார்.

மேலும், அர்ஜென்டினா சுற்றுப்பயண அனுபவம் குறித்து அவர் பேசுகையில், அர்ஜென்டினா சுற்றுப்பயணத்தில் அணி சிறப்பாக விளையாடியது” என்றார். தொடர்ந்து, உலகத் தரம் வாய்ந்த அணிகளுடன் விளையாடிய அனுபவம், அணியின் ஆழத்தை மதிப்பீடு செய்ய உதவியது என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க : தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்.. இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய ஜோடி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com