Thailand Open 2026 final : தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆடவர் ஜோடி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.
Thailand Open 2026 final : தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆடவர் ஜோடி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.

Published on: May 16, 2026 at 4:59 pm
Updated on: May 16, 2026 at 5:00 pm
பாங்காக், மே 16, 2026: இந்திய ஜோடி சத்விக்சிராஜ் ரங்கரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி, தாய்லாந்து ஓபன் 2026 ஆண்கள் இரட்டையர் பிரிவில் அதிரடியான ஆட்டத்துடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இவர்கள், மலேசிய ஜோடி கோ ச்சே ஃபெய் – நூர் இஸ்சுதீனை 19-21, 22-20, 21-16 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்த சீசனின் முதல் இறுதி வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இந்தப் போட்டியில், முதல் செட்டில் மலேசியர்கள் வலுவாக தொடங்கி 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர். இந்த நிலையில், இரண்டாம் செட்டில் கடுமையான போட்டி ஏற்பட்டது. இதில், இந்தியர்கள் 22-20 என்ற கணக்கில் வெற்றி பெற்று போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்தனர். இதைத் தொடர்ந்து, மூன்றாம் செட்டில் சத்விக்-சிராக் தன்னம்பிக்கையுடன் விளையாடி 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
இறுதிப் போட்டி
இந்த நிலையில், இறுதிப் போட்டியில் இந்திய ஜோடி இந்தோனேசியாவின் லியோ ரொல்லி கார்னாண்டோ – டேனியல் மார்த்தின் அல்லது சீனாவின் ஹே ஜி டிங் – ரென் சியாங் யூ ஆகியோருடன் மோதவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரிஷப் பந்துக்கு ரூ.12 லட்சம் அபராதம்.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com