JEE Main Answer Key 2025: தேசிய தேர்வு முகமை தற்காலிக விடைக்குறிப்புக்கான ஒவ்வொரு சவாலையும் மிகுந்த தீவிரத்துடன் பரிசீலிப்பதாக ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.
JEE Main Answer Key 2025: தேசிய தேர்வு முகமை தற்காலிக விடைக்குறிப்புக்கான ஒவ்வொரு சவாலையும் மிகுந்த தீவிரத்துடன் பரிசீலிப்பதாக ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.
Published on: April 15, 2025 at 11:25 pm
புதுடெல்லி, ஏப்.15 2025: ஜே.இ.இ (JEE) மெயின் 2025 தேர்வர்கள் இயற்பியல், வேதியியலில் மூன்று மற்றும் கணிதத்தில் இரண்டு கேள்விகளில் முரண்பாடுகளைக் கண்டறிந்தனர். இதனால், பல்வேறு மாணவர்கள் இந்தப் பாடங்களில் குறைந்தது ஒன்பது கேள்விகளுக்கு ஆட்சேபனைகளைக் குறிப்பிட்டு கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், விடைத்தாளில் பிழைகள் இருப்பதாகவும், அவர்கள் குறித்த கேள்விகள் காலியாக இருப்பதாகவும் கூறினார்கள். மேலும், தேர்வு செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று மாணவர்கள் கோரினர். இதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை (NTA), தற்காலிக விடைக்குறிப்புக்கான ஒவ்வொரு சவாலையும் மிகவும் தீவிரமாக கருதுவதாக ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்வர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட பதில்களைப் பார்க்க அனுமதிக்கும் வகையில், வெளிப்படையான தேர்வு செயல்முறையை எப்போதும் பராமரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “ஜே.இ.இ. மெயின் செசன்-II ஐப் பொறுத்தவரை, பதிவேற்றப்பட்ட விடைக்குறிப்புகள் தற்காலிகமானவை மட்டுமே.
NTA has always followed a transparent examination process, which allows candidates to view their recorded responses as soon as the provisional answer keys are released. The NTA considers every challenge to the provisional Answer Key with utmost seriousness.
— National Testing Agency (@NTA_Exams) April 15, 2025
ஜே.இ.இ மெயின் செசன்- II க்கான இறுதி விடைக்குறிப்புகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இறுதி விடைக்குறிப்பால் மட்டுமே மதிப்பெண் தீர்மானிக்கப்படுகிறது.
தற்காலிக விடைக்குறிப்புகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது விரும்பத்தக்கது அல்ல. தேவையற்ற சந்தேகம் மற்றும் பதட்டத்தை உருவாக்கும் அறிக்கைகளால் தவறாக வழிநடத்தப்படக்கூடாது என்று தேசிய தேர்வு முகமை விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க : இந்தியாவின் சிறந்த 10 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com