Auto Fare Hike Demand : “ஆட்டோ கட்டணத்தை மறுஆய்வு செய்து உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Auto Fare Hike Demand : “ஆட்டோ கட்டணத்தை மறுஆய்வு செய்து உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: June 12, 2026 at 7:27 pm
சென்னை, ஜூன் 12, 2026: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தானி (ஆட்டோ ரிக்ஷா) களுக்கான கட்டணம் கடைசியாக 2013-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணப்படி ஆரம்ப 1.8 கிலோமீட்டருக்கு ரூ.25, அதன்பின் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.12 என நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளாக இந்த கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, “இந்த காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி. எரிபொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. 2013-ஆம் ஆண்டில் லிட்டருக்கு ரூ.65 முதல் ரூ.70 வரை இருந்த பெட்ரோல் விலை தற்போது ரூ.100-ஐ தாண்டி உயர்ந்துள்ளது. அதேபோல் சி.என்.ஜி. எரிபொருள் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது” என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள மருத்துவர் ராமதாஸ், “மத்திய மற்றும் மாநில அரசுகள் வெளியிடும் நுகர்வோர் விலை குறியீட்டு எண்களின் அடிப்படையில் பார்க்கும்போது, 2013 முதல் 2026 வரை பணவீக்கம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன்படி 2013-ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட ரூ.25 என்ற ஆரம்ப கட்டணம் இன்று குறைந்தபட்சம் ரூ.40 முதல் ரூ.45 ஆகவும், கிலோமீட்டருக்கு ரூ.12 என்ற கட்டணம் ரூ.18 முதல் ரூ.20 ஆகவும் மறுஆய்வு செய்யப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.” எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, “தானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தையும் பொதுமக்களின் பயணச் செலவையும் சமநிலைப்படுத்தும் வகையில் போக்குவரத்துத் துறை, ஆட்டோ தொழிற்சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவை தமிழக அரசு உடனடியாக அமைத்து விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : மூகாம்பிகையை மனமுறுகி வேண்டிய விஜய்.. வைரல் வீடியோ
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com