தீபாவளி பயணிகளுக்கு குட் நியூஸ்,, எழும்பூர், தாம்பரத்தில் இருந்து 12 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

Train Update: தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலப் பயணிகள் நெரிசலைக் குறைக்கும் வகையில், தெற்கு ரயில்வே 12 சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்துள்ளது. தாம்பரம்–போடிநாயக்கனூர், திருநெல்வேலி–தாம்பரம், எழும்பூர்–கன்னியாகுமரி உள்ளிட்ட வழித்தடங்களில் பயணிக்கும் மக்கள் இந்த அறிவிப்பால் பயனடைவார்கள்.

Published on: October 26, 2026 at 3:01 pm

Updated on: October 26, 2026 at 3:02 pm

சென்னை, அக். 26 2026: பண்டிகைக் காலங்களில் அதிகரிக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் நோக்கில், தெற்கு ரயில்வே 12 சிறப்பு விரைவு ரயில்களின் சேவையை நீட்டித்துள்ளது. சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட நிலையங்களில் இருந்து இயக்கப்படும் இந்தச் சிறப்பு ரயில்கள், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கேரளாவின் முக்கிய நகரங்களுக்குப் பயணிக்கும் மக்களுக்கு கூடுதல் போக்குவரத்து வசதியை வழங்கும்.

தாம்பரம்–போடிநாயக்கனூர் இடையே ஒவ்வொரு சனிக்கிழமையும் இயக்கப்படும் சிறப்பு ரயிலின் சேவை நவம்பர் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில், போடிநாயக்கனூர்–தாம்பரம் சிறப்பு ரயில் நவம்பர் 15-ம் தேதி வரை இயக்கப்படும். வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் திருநெல்வேலி–தாம்பரம் மற்றும் தாம்பரம்–திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவைகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

மேலும், சென்னை எழும்பூர்–கன்னியாகுமரி, கன்னியாகுமரி–சென்னை எழும்பூர், சென்னை எழும்பூர்–கொல்லம், கொல்லம்–சென்னை எழும்பூர் மற்றும் கொல்லம்–சென்னை சென்ட்ரல் வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களும் இந்தச் சேவை நீட்டிப்பு அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் நீண்ட தூரப் பயணிகளுக்கு கூடுதல் பயண வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. ரூ.1.59 கோடி கண்டுபிடிப்பு!

உயர்நீதிமன்றம் அனுமதி.. தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி! சென்னையில் 7 இடங்களில் அணிவகுப்பு
RSS March

உயர்நீதிமன்றம் அனுமதி.. தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி! சென்னையில் 7 இடங்களில் அணிவகுப்பு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com