மூகாம்பிகையை மனமுறுகி வேண்டிய விஜய்.. வைரல் வீடியோ

CM Vijay Prays at Kollur Temple: முதலமைச்சர் விஜய், தனது 3 நாள் டெல்லி பயணைத்தை முடித்துவிட்டு கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் வழிபாடு நடத்தினார்.

Published on: June 12, 2026 at 6:43 pm

Updated on: June 12, 2026 at 6:44 pm

பெங்களூரு, ஜுன் 12 2026: தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், 3 நாள் பயணத்தை முடித்துவிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் (VT-VSV) மூலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

பிற்பகல் 1.20 மணியளவில் விமான நிலையம் வந்தடைந்த அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக உடுப்பி மாவட்டத்தின் பைந்தூர் தாலுகாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றார்.

சுமார் 120 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, தென்னிந்தியாவின் முக்கிய புனிதத் தலங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக அவர் சென்றார். கோவிலுக்குள் செல்லும்போது முதலமைச்சர் விஜய் மேல்சட்டை அணியவில்லை. அவரது பாதுகாவலரும் மேல்சட்டை அணியாமல் கோவிலுக்குள் சென்றார். பின்னர் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர் விஜய், கோவிலுக்கு 1 கிலோ 600 கிராம் எடையுள்ள 2.5 அடி நீள வெள்ளி வாளை காணிக்கையாக அளித்தார்.

(நன்றி: பி.டி.ஐ)

தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வரும் இந்த கோவில், தென்னிந்தியாவின் முக்கிய வழிபாட்டு தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பதவியில் இருக்கும் நிலையில் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர்களில் விஜய் மூன்றாவது நபராக இருப்பதும் இந்த பயணத்தின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் பதவியில் இருந்தபோது இந்த கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். விஜயின் வருகையை முன்னிட்டு வழிநெடுகிலும் அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் பக்தர்கள் திரண்டு நின்று அவரை காண முயன்றனர். இதையடுத்து, தடுப்புகள் அமைக்கப்பட்டு கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதையும் படிங்க : மேட்டூர் அணை திறப்பில் தாமதம்.. விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மேட்டூர் அணை திறப்பில் தாமதம்.. விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Edappadi Palanisamy

மேட்டூர் அணை திறப்பில் தாமதம்.. விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்.. எடப்பாடி பழனிசாமி

குருவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு திட்டம்.. முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
₹135 Crore Special Package

குருவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு திட்டம்.. முதலமைச்சர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com