விமான டிக்கெட் உயர வாய்ப்பில்லை.. வாட் வரியை குறைத்த டெல்லி, மகாராஷ்டிரா!

Delhi Slashes Jet Fuel VAT : டெல்லி அரசு விமான எரிபொருள் (ஏ.டி.எஃப்) மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) 25% இலிருந்து 7% ஆகக் குறைத்துள்ளது.

Published on: May 17, 2026 at 3:28 pm

புதுடெல்லி, மே 17, 2026: டெல்லி அரசு விமான எரிபொருள் (ஏ.டி.எஃப்) மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) 25% இலிருந்து 7% ஆகக் குறைத்துள்ளது.
இந்த முடிவு ஆறு மாதங்களுக்கு அமல்படுத்தப்படும் எனவும், மேற்கு ஆசியாவில் நடைபெறும் மோதலால் உலகளாவிய எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், விமான நிறுவனங்களுக்கும் பயணிகளுக்கும் நிவாரணம் அளிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசின் முடிவு

டெல்லி அரசின் இந்த முடிவினால், வாட் வரி 25% இலிருந்து 7% ஆகக் குறைக்கப்பட்டது. மேலும், இது ஆறு மாதங்களுக்கு மட்டுமே அமல்படுத்தப்படும் என்றும் மாநில முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

என்ன காரணம்?

மேற்கு ஆசியா மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. மேலும், விமான நிறுவனங்களின் எரிபொருள் செலவு 35–40% வரை உயர்ந்ததால், செயல்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ளன.
இதற்கிடையில், மகாராஷ்டிரா அரசு ஏற்கனவே வாட் வரியை 18% இலிருந்து 7% ஆகக் குறைத்தது; அதனைத் தொடர்ந்து டெல்லி அரசு முடிவு எடுத்துள்ளது.

விமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தச் சலுகை டிக்கெட் விலை உயர்வை தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : இந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி.. 3 முக்கிய காரணங்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com