Vadivel Ravana meets Anbumani: மருத்துவர் அன்புமணி ராமதாசை வடிவேல் ராவணன் சந்தித்து பேசினார். பாமக உள்கட்சி பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Vadivel Ravana meets Anbumani: மருத்துவர் அன்புமணி ராமதாசை வடிவேல் ராவணன் சந்தித்து பேசினார். பாமக உள்கட்சி பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published on: April 15, 2025 at 10:42 pm
சென்னை ஏப்ரல் 15 2025: பாட்டாளி மக்கள் கட்சியில் உள்கட்சி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தானே கட்சியின் தலைவராக செயல்படுகிறேன் என்றும் தற்போது தலைவராக உள்ள அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக செயல்படுவார் என்றும் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இந்த அறிவிப்புக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட மருத்துவர் அன்புமணி ராமதாஸ், “பொதுக்குழு கூடி தம்மை தலைவராக தேர்வு செய்தார்கள்; தலைவர் மருத்துவர் ராமதாஸின் பெயருக்கு பெருமை சேர்க்கும் விதமாக நான் செயல்படுவேன். தொடர்ந்து கட்சியை தலைவராக இருந்து வழிநடத்துவேன்” என தெரிவித்தார்.
இதையடுத்து பாட்டாளி மக்கள் கட்சியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த திலகபாமா மருத்துவர் ராமதாஸ் குறித்து சில கருத்துக்களை கூறியதாக செய்திகள் வெளியாகின.
இதைத்தொடர்ந்து பாமகவை சேர்ந்த வடிவேல் ராவணன், பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து திலகபாமா விலக வேண்டும்; அவருக்கு கட்சியைப் பற்றி என்ன தெரியும்? என அதிரடியாக சில கருத்துக்களை வெளியிட்டார்.
இது கட்சி தொண்டர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 15 2025) பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த நிர்வாகியான வடிவேல் ராவணன், மருத்துவர் அன்புமணி ராமதாசை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது பாட்டாளி மக்கள் கட்சியின் திலக பாமாவும் உடன் இருந்தார். இதனால் பாட்டாளி மக்கள் கட்சியில் ஏற்பட்டுள்ள உள்கட்சி சலசலப்பு விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சாட்டை youtube சேனல்.. சீமான் பரபரப்பு அறிக்கை..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com