Dhoni explains why Ashwin was dropped: லக்னோ சூப்பர் ஜெயின்ட் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் விளையாடவில்லை. இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி.
Dhoni explains why Ashwin was dropped: லக்னோ சூப்பர் ஜெயின்ட் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் விளையாடவில்லை. இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி.
Published on: April 15, 2025 at 10:03 pm
சென்னை ஏப்ரல் 15 2025: ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்றது. ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்தனர்.
அந்த அணியின் ரிஷப் பந்த் அதிகபட்சமாக 49 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். தொடர்ந்து மிச்சல் மார்ஸ் 25 பந்துகளில் 30 ரண்களும் ஆயுஷ் பதோணி 17 பந்துகளில் 22 ரன்களும் குவித்தனர். சென்னை அணிதரப்பில் ரவீந்திர ஜடேஜா 24 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கட்டும், மதிஷா பதிறானா 45 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு வைக்கட்டும், அன்சில் கம்போச் 20 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இதைத் தொடர்ந்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்தமட்டில் சிவம் துபாய் அதிரடியாக ஆடி 37 பந்துகளில் 43 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் நின்றார்.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 புள்ளி ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது. சென்னை அணியை பொருத்தமட்டில் ரச்சின் ரவீந்திர 22 பந்துகளில் 37 ரன்னும் ஷேக் ரஷீத் 19 பந்துகளில் 27 ரன்களும் குவித்து இருந்தார்கள்.
இந்த போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ரவிச்சந்திர அஸ்வின் இடம் பெறவில்லை. இந்த நிலையில், போட்டியில் ரவிச்சந்திர அஸ்வின் இடம்பெறாதது ஏன் என்பது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த விளக்கத்தில், ” அஸ்வின் மீது நாங்கள் கூடுதலான அழுத்தத்தை கொடுத்து விட்டோம்; நேற்றைய போட்டியை பொருத்தமட்டில் மாற்றம் என்பது அவசியமாக தேவைப்பட்டது. ஆகவே அஸ்வினுக்கு பதிலாக ஓவர்டேனை அணியில் சேர்த்தோம்; அணியைப் பொருத்தமட்டில் பேட்டிங்கை விட பவுலிங் யூனிட்டில் தான் மாற்றம் தேவைப்பட்டது. இதற்காகத்தான் அஸ்வின் நீக்கப்பட்டார். மற்றபடி எவ்வித காரணமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com