John Jebaraj anticipatory bail plea: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதாகி உள்ள பாதிரியார் ஜான் ஜெபராஜ், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
John Jebaraj anticipatory bail plea: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதாகி உள்ள பாதிரியார் ஜான் ஜெபராஜ், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Published on: April 15, 2025 at 9:58 pm
சென்னை ஏப்ரல் 15 2025: கோவையைச் சேர்ந்த பிரபல கிறிஸ்தவ பாதிரியார் ஜான் ஜெபராஜ். கிறிஸ்தவ ஆன்மீக ராப் பாடல்களுக்கு இவர் பிரசித்தி பெற்றவர். மேலும் கிறிஸ்தவ ஊழியமும் இவர் நடத்தி வந்தார். இவர் தனது ஊழியத்தில் அதிரடியாக சில வார்த்தைகளை பேசுவார். இந்த வார்த்தைகள் மற்ற கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தன.
இது போன்ற வார்த்தைகளை, ஜான் ஜெபராஜ் கைவிட வேண்டும் என மற்ற கிறிஸ்தவ பாதிரியார்கள் பேசுவதும் உண்டு. இவ்வாறு புகழின் உச்சத்தில் இருந்த ஜான் ஜெபராஜ், கடந்த ஆண்டு இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. மேலும் பாதிரியார் ஜான் ஜெபராஜ் தனது நண்பர் ஒருவருடன் பேசும் போது, சில சர்ச்சையான விஷயங்களை தெரிவித்து இருப்பார். இந்த ஆடியோவும் லீக் ஆகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: கன்னியாகுமரி போறீங்களா..? இந்த 5 நாட்கள் கண்ணாடி பாலத்தை பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?
இந்த நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாதிரியார் ஜான் ஜெபராஜ் போலீசார் தேடி வந்தனர். போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க பாதிரியார் ஜான் ஜெபராஜ் தலைமறைவானார். இதற்கிடையில் கேரளத்தில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். முன்னதாக முன் ஜாமின் கோரி, சென்னை ஐகோர்ட்டில் ஜான் ஜெபராஜ் மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பாதிரியார் ஜான் ஜெபராஜ் க்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
இதற்கிடையில் பாதிரியார் ஜான் ஜெபராஜ் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது பாதிரியார் ஜான் ஜெபராஜ் க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பாதிரியார் ஜான் ஜெபராஜ் மீது 14 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாட்டை youtube சேனல்.. சீமான் பரபரப்பு அறிக்கை..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com