ஐபிஎல் போட்டி பார்த்தபோது விபத்து… பாரம் தாங்காமல் சரிந்த மேற்கூரை..வெளி மாநில தொழிலாளி உயிரிழப்பு

Nandambakkam accident: தொழிலாளர் தங்குமிடத்தில் படிக்கட்டு கைப்பிடி உடைந்து விழுந்த விபத்தில் வடமாநில தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published on: June 1, 2026 at 8:37 pm

சென்னை, ஜுன் 1 2026: சென்னை நந்தம்பாக்கத்தில் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக தற்காலிக தொழிலாளர் தங்குமிடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெற்ற ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியை காண நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டிருந்தனர்.

அகமதாபாத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் இறுதிப்போட்டி நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில், ஏராளமானோர் செல்போன் மற்றும் டேப்லெட்டுகள் மூலம் போட்டியை கண்டு ரசித்தனர்.

அப்போது 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரும்பினால் அமைக்கப்பட்ட மேற்கூரை படிக்கட்டின் ஒரு பகுதியில் திரண்டு நின்று கைப்பிடியில் சாய்ந்து உற்சாகமாக போட்டியை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, அதிக எடையை தாங்க முடியாமல் கைப்பிடி திடீரென உடைந்ததால், சுமார் 15 அடி உயரத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்டோர் ஒருவர்மீது ஒருவர் விழுந்தனர். தகவலறிந்து நந்தம்பாக்கம் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பினர்.

காயமடைந்தவர்களில் ஜார்கண்டைச் சேர்ந்த 31 வயதான பிரிஞ்சி மஞ்ஜி என்பவர் படுகாயங்களுடன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை மற்றும் போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற 48 தொழிலாளர்களும் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருச்செங்கோடு துயரம்.. தேர்ச்சக்கரத்தில் சிக்கிய மாணவர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com