Kanyakumari Glass Bridge: கன்னியாகுமரியில் உள்ள கண்ணாடி பாலத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு ஐந்து நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Kanyakumari Glass Bridge: கன்னியாகுமரியில் உள்ள கண்ணாடி பாலத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு ஐந்து நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Published on: April 13, 2025 at 1:00 pm
கன்னியாகுமரி ஏப்ரல் 13 2025: கன்னியாகுமரியில் அமைந்துள்ள கண்ணாடி இழை நடைபாலம், விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைகளுக்கு இடையே கடலின் மேலே அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்ணாடி பாலம் பார்க்க மிகவும் பிரம்மிப்பாக இருக்கும். இதனைக் காண உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்த கண்ணாடி இலை பாலம், ₹37 கோடி மதிப்பில் கட்டப்பட்டது ஆகும்.
இந்தப் பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி திறந்து வைத்தார். திருவள்ளுவர் சிலை கட்டப்பட்ட வெள்ளிவிழா ஆண்டு கொண்டாட்டத்தினை குறிக்கும் வகையில் இந்த கண்ணாடி இழை பாலம் திறந்து வைக்கப்பட்டது.
கடந்த காலத்தில் விவேகானந்தர் நினைவு பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் பாறைக்கு படகு போக்குவரத்து மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கண்ணாடி பாலம், சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது.
மேலும் இந்த கண்ணாடி பாலம் வில் நாண் வளைவு பாலம் என்ற வகையை சேர்ந்த கட்டுமானத்தை கொண்டுள்ளது. இது 97 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த பாலத்தின் நடுவில் இரண்டு அங்குல தடிமன் கொண்ட மூன்று அடி அகலம் உடைய ஒளி ஊடுருவ கூடிய கண்ணாடி தரை ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன.
இதனால் இதனை காண சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு படையெடுத்து வந்தனர். இந்த நிலையில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு பராமரிப்பு பணிகள் காரணமாக கண்ணாடி பாலத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது ஐந்து நாட்கள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தட்கல் புக்கிங் நேரத்தில் மாற்றமா? தீயாய் பரவும் வதந்தி.. ஐ.ஆர்.சி.டி.சி விளக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com