தட்கல் புக்கிங் நேரத்தில் மாற்றமா? ஐ.ஆர்.சி.டி.சி விளக்கம்!

Tatkal Ticket Booking Timings: தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரம் மாறுகிறதா? இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக, தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரம் திருத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடக தளங்களில் தகவல்கள் பரவின.

Published on: April 13, 2025 at 11:25 am

Updated on: April 13, 2025 at 12:53 pm

புதுடெல்லி, ஏப்.13 2025: தட்கல் மற்றும் பிரீமியம் ரயில் டிக்கெட் முன்பதிவு நேர மாற்றங்கள் குறித்து சமூக ஊடக தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இத்தகைய மாற்றங்கள் எதுவும் முன்மொழியப்படவில்லை மற்றும் செயல்படுத்தப்படவில்லை என்று ஐ.ஆர்.சி.டி.சி தெளிவுபடுத்தும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது குறித்த ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளுக்கான வெவ்வேறு நேரங்கள் குறித்து சமூக ஊடக சேனல்களில் சில பதிவுகள் பரவி வருகின்றன. ஏசி அல்லது ஏசி அல்லாத வகுப்புகளுக்கான தட்கல் அல்லது பிரீமியம் தட்கல் முன்பதிவு நேரங்களில் தற்போது அத்தகைய மாற்றம் எதுவும் முன்மொழியப்படவில்லை.

மேலும், முகவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட முன்பதிவு நேரங்களும் மாறாமல் உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, “டிக்கெட் முன்பதிவு விதிகள் தொடர்பான எந்தவொரு தகவலுக்கும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்கல் டிக்கெட் புக்கிங் நேரங்கள்

ஐ.ஆர்.சி.டி.சி படி, பயண நாள் தவிர்த்து, பயண தேதிக்கு ஒரு நாள் முன்னதாக தட்கல் டிக்கெட்டுகளை ரயில் புறப்படும் நிலையத்திலிருந்து முன்பதிவு செய்யலாம்.
அதன்படி, ஏசி வகுப்புக்கு (2A/3A/CC/EC/3E) காலை 10:00 மணி முதல் ஏசி அல்லாத வகுப்புக்கு (SL/FC/2S) காலை 11:00 மணி வரை முன்பதிவு செய்யலாம்.
முதல் ஏசி தவிர அனைத்து வகுப்புகளிலும் தட்கல் டிக்கெட்டுகள் அனுமதிக்கப்படுகின்றன.

தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரங்கள் திருத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடக தளங்களில் பல தவறான தகவல்கள் பரவி வருவதை அடுத்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வை-பை ஸ்பீடு ஆமை வேகத்தில் உள்ளதா? இந்த டிரிக்ஸ்-ஐ உடனே செய்யுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com