லஞ்சம், ஊழலுக்கு இடமில்லை… நல்லாட்சியே இலக்கு: திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேச்சு

CM Vijay Trichy Visit: திருச்சியில் பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், தமிழக மக்களுக்கு ஊழல் மற்றும் லஞ்சமற்ற ஆட்சியை வழங்குவேன் என்று உறுதியளித்தார்.

Published on: June 1, 2026 at 11:57 pm

திருச்சி, ஜுன் 1 2026: திருச்சியில் நடைபெற்ற நன்றி தெரிவிப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழக மக்கள் சாதி மற்றும் பணபல அரசியலை நிராகரித்து, தமிழக வெற்றிக் கழக (TVK) அரசுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். தன்னை மாநிலத்தின் “முதல் சேவகன்” எனக் குறிப்பிட்ட அவர், மக்களின் நம்பிக்கையை காக்கும் வகையில் வெளிப்படையான, மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை வழங்குவோம் என்று உறுதியளித்தார்.

திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு சிறப்பு நன்றி தெரிவித்த விஜய், அந்த தொகுதி எப்போதும் தனது மனதில் தனி இடம் பெறும் என்றார். ஆட்சி அமைந்த பிறகு ஆறு மாதங்கள் அமைதியாக இருப்போம் என கூறிய எதிர்க்கட்சியினர், ஆறு நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை என விமர்சித்தார்.

“நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள், நான் வேலை செய்துகொண்டே இருப்பேன்” என்று எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்தார். மேலும், தமிழக அரசியலில் தனது நேரடி அரசியல் போட்டியாளர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்றும் குறிப்பிட்டார்.

தேர்தல் முடிவுகள் மக்கள் மாற்றத்தை விரும்பியதற்கான சான்று எனக் கூறிய விஜய், பணபலமும் சாதி அரசியலும் மக்களின் தீர்ப்பால் தோற்கடிக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் முதல் தேர்தல் சாதனையை விட அதிகமாக இருந்தாலும், அவரது அரசியல் மரபு ஒப்பிட முடியாதது. சட்டமன்ற நடவடிக்கைகள் மற்றும் ஆட்சிப் பணிகளில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும்.

அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பேசிய விஜய், 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, முதல் 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியதை நினைவுகூர்ந்தார்.

டாஸ்மாக் ஒழுங்குமுறை, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் நலன் அரசின் முக்கிய முன்னுரிமையாக இருக்கும் என்றும் தெரிவித்தார். பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை மேம்படுத்தும் வகையில் ‘சிங்கப்பெண்’ திட்டம் அடுத்த வாரம் தொடங்கப்படும் என அறிவித்தார்.

மேலும், குதிரை பேரம் மூலம் ஆட்சியை பிடிக்க முயன்றது எதிர்க்கட்சிகள் தான் என்றும், தனது அரசு அத்தகைய அரசியலில் ஈடுபடவில்லை. வாக்கு வாங்கும் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.

மாநில உரிமைகள், நதிநீர் உரிமைகள் மற்றும் சமூக நீதியை பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருக்கும். 234 சட்டமன்ற தொகுதிகளும் அரசுக்கு சமமானவை என்பதால் மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சி கொண்டு செல்லப்படும் என்றும் உறுதியளித்தார்.

தீய சக்தியும், தீந்துபோன சக்தியும் ஒன்று சேர்ந்து திருட்டு தனமாக கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்து கொள்ளையடிக்க திட்டம் போட்டனர். தீய சக்தி இப்போது மக்களைவிட்டு தூரமாக போன தூர சக்தியாகி விட்டது.

வரவிருக்கும் இடைத்தேர்தலில், திருச்சி கிழக்கு தொகுதியைச் சேர்ந்த உள்ளூர் வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என சுட்டிக்காட்டினார்.

ஊழல் மற்றும் லஞ்சமற்ற ஆட்சியை வழங்குவதே எனது ஒரே இலக்கு என்றும், நல்லாட்சியின் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோம் என்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 1800 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை.. அன்புமணி குற்றச்சாட்டு

ஐபிஎல் போட்டி பார்த்தபோது விபத்து… பாரம் தாங்காமல் சரிந்த மேற்கூரை..வெளி மாநில தொழிலாளி உயிரிழப்பு
Nandambakkam accident

ஐபிஎல் போட்டி பார்த்தபோது விபத்து… பாரம் தாங்காமல் சரிந்த மேற்கூரை..வெளி மாநில தொழிலாளி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com