10 தங்கங்களுடன் ஜொலித்த இந்தியா… இளம் வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Narendra Modi: 22-வது ஆசிய 20 வயதுக்குட்பட்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிற்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Published on: June 1, 2026 at 7:41 pm

புதுடெல்லி, ஜுன் 1 2026: 22-வது ஆசிய 20 வயதுக்குட்பட்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 10 தங்கம் உட்பட மொத்தம் 19 பதக்கங்களை வென்று சிறப்பான சாதனை படைத்துள்ளது. இந்திய இளம் வீரர், வீராங்கனைகளின் இந்த அசத்தலான செயல்பாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது , ஆசிய U-20 தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய அணியின் அபாரமான வெற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக கூறினார். 10 தங்கம் உள்ளிட்ட 19 பதக்கங்களை வென்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

மேலும், இந்திய இளம் தடகள வீரர்களின் இந்த சிறப்பான செயல்பாடு அவர்களின் உறுதி, அர்ப்பணிப்பு மற்றும் திறமையை வெளிப்படுத்துவதாக பிரதமர் குறிப்பிட்டார். கடுமையான பயிற்சி மற்றும் விடாமுயற்சியின் பலனாக இந்த வெற்றி கிடைத்துள்ளதாகவும் அவர் பாராட்டினார்.

இந்த சாதனை, நாட்டின் பல இளைஞர்களை விளையாட்டுத் துறையில் ஈடுபட ஊக்குவிக்கும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். வருங்காலங்களில் மேலும் பல இளம் இந்தியர்கள் விளையாட்டில் சாதனை படைத்து நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள் என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஆசிய U-17 சாம்பியன்ஷிப்: 3 தங்கம் உட்பட 10 பதக்கங்கள்… இந்திய மகளிர் மல்யுத்த அணி சாதனை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com