Sattai YouTube Channel: நாம் தமிழர் கட்சிக்கும் சாட்டை youtube சேனலுக்கும் தொடர்பு இல்லை என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Sattai YouTube Channel: நாம் தமிழர் கட்சிக்கும் சாட்டை youtube சேனலுக்கும் தொடர்பு இல்லை என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Published on: April 15, 2025 at 9:36 pm
சென்னை ஏப்ரல் 15 2025: நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் என்பவர் சாட்டை என்ற youtube தளத்தை நடத்தி வருகிறார். இந்த யூடியூப் சேனலுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பு இல்லை என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டர் எக்ஸ் தளத்தில் சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள ஏப்ரல் 15 2025 தேதியிட்ட அறிக்கை ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த அறிக்கையில், ” திருச்சி துரைமுருகன் நடத்தும் சாட்டை youtube சேனலுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
அதில் வருகின்ற கருத்துக்கள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்ட கருத்தாகும். அவற்றிற்கு எந்த வகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறப்பட்டு இருந்தது.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரைமுருகன், அவ்வப்போது தனது சேனலில் சூடான பரபரப்பான செய்திகள் பற்றி பேசி வருகிறார். இந்த youtube சேனலை பல்லாயிரக்கணக்கானோர் பின் தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு; நடிகர் விஜய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com