India’s retail inflation: இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. இது, வட்டி குறைப்புக்கு வழிவகுத்துள்ளது.
India’s retail inflation: இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. இது, வட்டி குறைப்புக்கு வழிவகுத்துள்ளது.
Published on: April 15, 2025 at 8:16 pm
புதுடெல்லி, ஏப்.15 2025: இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான குறைந்த அளவிற்கு வந்துள்ளது. அதாவது, உணவுப் பொருள்களின் விலைகள் தொடர்ந்து மிதமாக இருப்பதால் இது சாத்தியமாகியுள்ளது. அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் உலகளாவிய வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சம் ஒருபுறம் நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில், மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான சாத்தியங்களையும் இது உருவாக்கியுள்ளது. மேலும், மார்ச் மாதத்தில் ஆண்டு சில்லறை பணவீக்கம் 3.34% ஆகக் குறைந்தது காணப்பட்டது. இது பொருளாதார வல்லுநர்களின் மதிப்பீட்டான 3.60% ஐ விடக் குறைவு ஆகும்.
ஆகஸ்ட் 2019 க்குப் பிறகு இதுவே மிகக் குறைவு என்று அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக, பிப்ரவரியில் சில்லறை பணவீக்கம் 3.61% ஆக இருந்தது. இது குறித்து, பாங்க் ஆஃப் பரோடாவின் பொருளாதார நிபுணர் தீபன்விடா மஜும்தார், “மெதுவான உணவுப் பணவீக்கத்தால் சில்லறை பணவீக்கம் மீண்டும் மீண்டும் குறைகிறது” என்றார்.
மேலும், மார்ச் மாதத்தில் உணவுப் பணவீக்கம் முந்தைய மாதத்தில் 3.75% இலிருந்து 2.69% ஆகக் குறைந்தது. இது, மார்ச் மாதத்தில் உணவுப் பணவீக்கம் நவம்பர் 2021 க்குப் பிறகு மிகக் குறைவு ஆகும். இதற்கிடையில், கடந்த வாரம், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தொடர்ந்து இரண்டாவது முறையாக அதன் முக்கிய கொள்கை விகிதத்தைக் குறைத்தது. தொடர்ந்து, உள்நாட்டு தேவையை அதிகரிக்க வரும் மாதங்களில் மேலும் குறைப்புகளைக் குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு : ரிசர்வ் வங்கி அறிவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com