Repo rate: ரெப்போ வட்டி விகிதத்தில் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
Repo rate: ரெப்போ வட்டி விகிதத்தில் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
Published on: April 9, 2025 at 1:06 pm
Updated on: April 9, 2025 at 1:07 pm
புதுடெல்லி, ஏப்ரல் 09 2025: ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைத்து அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவிகிதத்தில் இருந்து 6.0 சதவீதமாக குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
கடந்த 2 மாதங்களில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு மே மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையேயான கால கட்டத்தில் 250 அடிப்படை புள்ளிகள் உயர்ந்ததால் 6.5 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் எவ்வித மாற்றமும் இன்றி தொடந்து 6.5 ஆகவே 11 முறை மாற்றமின்றி தொடர்ந்தது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்குள் ரெப்போ வட்டி விகிதம் 0.50 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க 444 நாட்கள் ஸ்கொயர் டிரைவ் டெபாசிட்.. பேங்க் ஆப் பரோடாவின் புதிய திட்டம்.. ₹1 லட்சம் முதலீடு, எவ்வளவு ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com