கேரளத்தில் நாகரீக அரசியல்.. பினராய் விஜயன் வீடு தேடிச் சென்ற வி.டி சதீசன்!

Satheesan Visits Vijayan in Thiruvananthapuram : கேரளத்தின் புதிய முதலமைச்சராக காங்கிரஸின் வி.டி சதீசன் தேர்வாகியுள்ளார்; இந்த நிலையில், அவர் பினராய் விஜயன் வீடு தேடிச் சென்று அவரைச் சந்தித்தார்.

Published on: May 16, 2026 at 10:27 am

திருவனந்தபுரம், மே 16, 2026: கேரளாவின் புதிய முதலமைச்சராக காங்கிரஸின் வி.டி. சதீசன் தேர்வாகியுள்ளார்; இந்த நிலையில் அவர் முன்னாள் முதலமைச்சர் பினராய் விஜயனை அவரது இல்லம் தேடிச் சென்று வெள்ளிக்கிழமை (மே 15) சந்தித்தார். திருவனந்தபுரத்தில் உள்ள பினராய் விஜயன் இல்லத்தில் இந்தச் சந்திப்பு சில மணி நேரங்கள் நடந்தது. இந்தச் சந்திப்புக்கு பின்னர் இருவரும் புன்னகைத்தபடி ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர்.

வி.டி. சதீசன் திருவனந்தபுரத்தில் உள்ள பினராய் விஜயனின் வாடகை வீட்டில் அவரை சந்தித்தார். அப்போது விஜயன், மனைவி கமலா, மகள் வீணா, பேரன் ஆகியோருடன் சதீசனை வரவேற்றார்.
இந்நிலையில், இருவரும் தேநீர் அருந்தியபடி, அரசியல் வாதங்களை விட்டு விலகி, அமைதியான உரையாடலில் ஈடுபட்டனர்.

கேரள அரசியல் மாற்றம்

கேரளத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள 140 சட்டமன்ற தொகுதிகளில் 102 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளாக நீடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஐக்கிய முன்னணி ஆட்சி அகற்றப்பட்டது.

மே 18 பதவியேற்பு

இந்த நிலையில் வி.டி சதீசன் கேரளத்தின் முதலமைச்சராக மே 18, 2026 பதவியேற்கிறார்; பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டமன்றக் குழுத் தலைவராக, எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கிறார்.
இதற்கிடையில் வி.டி சதீசன், “பினராயி விஜயன் கேரள அரசியலின் மூத்த தலைவர். எல்லா விஷயங்களிலும் ஒன்றாக நிற்க முடியாது. ஆனால் மாநில நலனுக்காக ஒன்றிணைய வேண்டும்” என்று கூறினார்.

இந்த நிலையில் இருவரது இந்த சந்திப்பு, கடுமையான தேர்தல் பிரச்சாரத்திற்குப் பிறகு, அமைதியான மாற்றம் என்பதற்கான சின்னமாகக் கருதப்படுகிறது. மேலும், சதீசன், அதிக பாதுகாப்பு வாகனங்களை தவிர்த்து, எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றுவதாக அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க : 500 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்.. யார் இந்த ஜோதி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com