CJP Protest : ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) சார்பில் மீண்டும் போராட்டம் நடத்தப்படவுள்ள நிலையில், டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
CJP Protest : ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) சார்பில் மீண்டும் போராட்டம் நடத்தப்படவுள்ள நிலையில், டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Published on: June 20, 2026 at 1:54 pm
புதுடெல்லி, ஜூன் 20 2026 : சமூக வலைதளங்கள் மூலம் உருவான ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janta Party – CJP) அமைப்பு சார்பில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தேசிய தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து முக்கிய பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், மாநில எல்லை நுழைவு பகுதிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூக வலைதள பதிவுகள் மற்றும் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அபிஜீத் டிப்கே தலைமையிலான CJP அமைப்பு, தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதற்காக ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்களுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று மதியம் டெல்லி ஜந்தர் மந்தரில் (ஜூன் 20) கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. கல்வித் துறையில் நடைபெறும் தேர்வு முறைகேடுகள் மற்றும் வேலைவாய்ப்பு தேர்வுகளில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளை எதிர்த்து இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
CJP தலைவர் அபிஜீத் திப்கே தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் பல்வேறு சமூக அமைப்புகள், மாணவர் சங்கங்கள், இடதுசாரி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். கல்வி அமைச்சரின் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், சில முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும், மெட்ரோ ரயில் சேவையை அதிகம் பயன்படுத்துமாறும் டெல்லி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க ராகுல் காந்தியின் அணுகுமுறை பா.ஜ.க.வை வலுப்படுத்துகிறது.. பினராய் விஜயன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com