MP Ravindran Meets Fisheries Secretary: இந்திய மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிகி, ஐ.ஏ.எஸ் அவர்களை, பாராளுமன்ற மாநிலங்களவை தி.மு.க உறுப்பினர் பேராசிரியர் J.கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் புதுடெல்லி கிரிஸி பவனில் சந்தித்துப் பேசினார்.
MP Ravindran Meets Fisheries Secretary: இந்திய மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிகி, ஐ.ஏ.எஸ் அவர்களை, பாராளுமன்ற மாநிலங்களவை தி.மு.க உறுப்பினர் பேராசிரியர் J.கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் புதுடெல்லி கிரிஸி பவனில் சந்தித்துப் பேசினார்.

Published on: July 29, 2026 at 4:41 pm
புதுடெல்லி, ஜூலை 29, 2026: இந்திய மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிகி, ஐ.ஏ.எஸ் அவர்களை, பாராளுமன்ற மாநிலங்களவை தி.மு.க உறுப்பினர் பேராசிரியர் J.கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் புதுடெல்லி கிரிஸி பவனில் இன்று (29.07.2026) சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் என்.ஏ.எஃப் தேசிய மீனவர் சங்கம் சார்பில் பிரவீன் குமார் பங்கேற்றார்.
இந்த கலந்துரையாடலில், மத்திய அரசு மீனவர்களுக்கு வழங்கும் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் நிலுவையில் உள்ளன என்பதும், அவை விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, மீனவர்களுக்கு நேரடியாக சென்றடைய வேண்டிய திட்டங்களில் சில குழப்பங்கள் இருப்பதாகவும், அவற்றை உடனடியாக களைந்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
முதன்மையாக, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் சென்னை உள்ளிட்ட துறைமுகங்களில் உள்ள 24 மீட்டர் மேல் நீளமுடைய ஆழ்கடல் மீன்பிடி படகுகள் அனைத்தும் போர்கால அடிப்படையில் பதிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனால், மீனவர்கள் சட்டபூர்வமான பாதுகாப்புடன் தொழிலில் ஈடுபட முடியும் என கூறப்பட்டது.
அதேபோல், ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கான ஊக்குவிப்பு திட்டங்கள் இருந்தபோதிலும், அவை நடைமுறையில் செயல்படுவதற்கு சில தடைகள் உள்ளன. அந்த தடைகளை நீக்கி, மீனவர்களுக்கு திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் எனக் கோரப்பட்டது.
மேலும், இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட ஆணைப்படி EEZ (ஆழ்கடல்) பகுதியில் மீன்பிடிக்கும் மீன்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி சீட்டு (Access Pass) வழங்கப்படுகிறது.
குஜராத் போன்ற மாநிலங்களில் இது வழங்கப்பட்டு முன்னிலை வகிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இதற்கான அறிவிப்பு மத்திய அரசால் வெளியிடப்படவில்லை. எனவே, தமிழக மீனவர்களுக்கு சரியான முறையில் அனுமதி வழங்கி, உலக தர மீன்கள் ஏற்றுமதிக்கு தடையாக இருக்கும் அனைத்தையும் நீக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையும் படிங்க : காக்ரோச் ஜனதா பார்ட்டிக்கு சட்ட உதவி.. ரூ.1 கோடி நிதியளித்த கபில் சிபல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com