உதயநிதி ஸ்டாலின் பேச்சை அவரது வீட்டினர் ஏற்பார்களா? அமைச்சர் சி.டி. நிர்மல் குமார்

C.T.R. Nirmal Kumar: உதயநிதி ஸ்டாலின் பேச்சை அவரது வீட்டில் உள்ள நபர்கள் ஏற்பார்களா என அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

Published on: August 4, 2026 at 9:38 pm

சென்னை, ஆக.4, 2026: தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம் தொடர்பாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். முதலமைச்சர் விஜய் குறித்து அநாகரீகமாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் உதயநிதி கைது செய்யப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றம் அவரை இன்றே விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர்கள் பலர் கண்டனக் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பியபோது, அமைச்சர் நிர்மல்குமார், “உதயநிதி மனதில் வக்கிரம் நிறைந்துள்ளது. இப்படிப்பட்ட வக்கிரம் கொண்டவர்கள் ஆட்சியில் இருந்தால் எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். அதனால் தான் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெகவுக்கு மக்கள் பெரும் வெற்றியை அளித்துள்ளனர்” என்று கூறினார். தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் பேச்சை அவரது வீட்டினர் ஏற்பார்களா? எனவும் வினாயெழுப்பினார்.

அவர் மேலும், “சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியில் இருக்கும் ஒருவர் பேசும் வார்த்தைகள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பெண்களுக்கு எதிராக யாரேனும் அவதூறு பேசினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மறைந்த ஜெயலலிதா இருந்திருந்தாலும் இதே நடவடிக்கையைத்தான் எடுத்திருப்பார். எம்.ஜி.ஆர். இருந்திருந்தாலும் இதேபோல நடந்திருப்பார்” என்று வலியுறுத்தினார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவர், “திமுக என்ன பேச வேண்டுமோ, அதை எடப்பாடி முன்பே பேசுகிறார். அப்படியென்றால், உதயநிதி கூறிய கருத்தை எடப்பாடி ஏற்கிறாரா? ஆதரிக்கிறாரா? என்பதை அவர் விளக்க வேண்டும்” என்று கேள்வியெழுப்பினார். மேலும், “மறைந்த ஜெயலலிதா பற்றியும் உதயநிதி அவதூறாக பேசியபோது, அப்போது எடப்பாடி முதலமைச்சராக இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

மின்சாரத்துறையில் 700 உதவி பொறியாளர்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் பதவி உயர்வு வழங்கியதற்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் நிர்மல்குமார், “மக்களுக்காக இன்னும் நிறைய பணிகளை செய்ய வேண்டியுள்ளது. 15 நிமிடங்களுக்கு மேல் மின் தடை ஏற்பட்டால் உடனடியாக தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 15 நிமிடங்களுக்குள் மின் விநியோகத்தை மீண்டும் சீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : நாளை பட்ஜெட், உதயநிதி அவையில் இருக்க வேண்டும்.. மு.க ஸ்டாலின்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com