இந்தியாவில் யூரோப்கிரிப் பிரீமியம் மோட்டார்சைக்கிள் டயர்கள் அறிமுகம்.. சென்னை வந்த எம்.எஸ் தோனி!

Eurogrip: “இந்தியாவில் யூரோப்கிரிப் தனது பிரீமியம் மோட்டார்சைக்கிள் டயர்களை தொடர்ந்து விரிவுபடுத்துவதைக் காண்பது உற்சாகம் அளிக்கிறது” என கிரிக்கெட்டர் எம்.எஸ் தோனி தெரிவித்துள்ளார்.

Published on: August 4, 2026 at 9:25 pm

சென்னை, ஆக. 4, 2026: இந்தியாவின் முன்னணி இரு மற்றும் மூன்று சக்கர வாகன டயர் பிராண்டான யூரோப்கிரிப் டயர்ஸ், தனது சர்வதேச அட்வென்ச்சர் டூரிங் அணிவரிசையான ‘ட்ரெயில்ஹவுண்ட் எஸ்டிஆர்’ (Trailhound STR)-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய தயாரிப்பை பிராண்டின் தூதரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான எம்எஸ். தோனி அறிமுகப்படுத்தினார். நடுத்தர மற்றும் பெரிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த டயர், நெடுஞ்சாலைகளிலும் இலகுவான ஆஃப்-ரோடு நிலப்பரப்புகளிலும் நம்பிக்கையளிக்கும் செயல்திறனை வழங்குகிறது.

இந்த அறிமுக விழாவில், எம்எஸ். தோனி நேரடியாக புதிய டயர்கள் பொருத்திய மோட்டார்சைக்கிள்களை ஓட்டி அதன் செயல்திறனை உறுதிசெய்தார். உலகளாவிய பிரீமியம் போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதியாக முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்ட ட்ரெயில்ஹவுண்ட் எஸ்டிஆர், இப்போது இந்திய நுகர்வோருக்கு கிடைக்கிறது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் அட்வென்ச்சர் டூரிங் பிரிவில் யூரோ கிரிப் பிராண்டின் விரிவாக்கத்தை இது வெளிப்படுத்துகிறது.

டிவிஎஸ் ஸ்ரீசக்ரா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி திரு. டி.கே. ரவி அவர்கள், “இந்தியாவில் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் பயணத்துறை வலுவான வளர்ச்சி வேகத்தில் உள்ளது. உலகளாவிய சந்தைகளில் ட்ரெயில்ஹவுண்ட் வரிசை வெற்றிகரமாக அறிமுகமானதைத் தொடர்ந்து, இந்திய ரைடர்களுக்கும் இப்போது வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார். துணை இயக்க அலுவலர் & தலைமை தொழில்நுட்ப அதிகாரி திரு. வி. சிவராமகிருஷ்ணன் அவர்கள், “90/10 டிரெட் பேட்டர்ன் கொண்ட இந்த டயர், சாலையில் கையாளுதலுக்கான முன்கணிப்புத் திறனையும், ஆஃப்-ரோடு சாகசத் திறனையும் ஒருங்கிணைக்கிறது” என்று தெரிவித்தார்.

எம்எஸ். தோனி, “இந்தியாவில் யூரோப்கிரிப் தனது பிரீமியம் மோட்டார்சைக்கிள் டயர்களை தொடர்ந்து விரிவுபடுத்துவதைக் காண்பது உற்சாகம் அளிக்கிறது. இந்த அறிமுகத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறினார்.

இந்த புதிய தயாரிப்பு அணிவரிசை, பிஎம்டபுள்யூ GS310, சுசூகி V ஸ்ட்ரோம் 650 XT, ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வின், ட்ரையம்ப் டைகர் 1200 ராலி எக்ஸ்ப்ளோரர், பெனெல்லி TRK 502x போன்ற பிரபலமான பைக் மாடல்களுக்குப் பொருந்தும் வகையில் பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது. மேலும், யூரோப்கிரிப்பின் கிரியேட்டர் சர்க்யூட் போட்டியின் வெற்றியாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க : 2 சதவீதம் சரிந்த பேடிஎம் பங்குகள்.. பின்னணி என்ன?

இந்தியாவில் யூரோப்கிரிப் பிரீமியம் மோட்டார்சைக்கிள் டயர்கள் அறிமுகம்.. சென்னை வந்த எம்.எஸ் தோனி!
Eurogrip

இந்தியாவில் யூரோப்கிரிப் பிரீமியம் மோட்டார்சைக்கிள் டயர்கள் அறிமுகம்.. சென்னை வந்த எம்.எஸ் தோனி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com