பாலினம், கல்வி பிரச்னையை கவனத்துடன் கையாள வேண்டும்.. நடிகை பூமி பெட்னேகர்

Bhumi Pednekar: “பாலினம் மற்றும் கல்வி பிரச்னையை கவனத்துடன் கையாள வேண்டும்” என நடிகை பூமி பெட்னேகர் தெரிவித்துள்ளார்.

Published on: August 3, 2026 at 11:46 am

மும்பை, ஆக.3, 2026: புது தில்லியில் நடைபெற்ற வினாத்தாள் கசிவு 2026 போராட்டங்களின் போது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாணவர்கள் பயன்படுத்திய அவதூறான வார்த்தைகளை நடிகை பூமி பெட்னேகர் கண்டித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில், நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவரைப் பற்றி இவ்வாறு பேசுவது இந்தியாவின் கலாச்சாரத்துக்கு முரணானது என்றும், இளைஞர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும்போதும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆனால், ஜூலை 20 அன்று நடைபெற்ற நாடாளுமன்றப் பேரணியின் போது மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி, தாக்குதல் மற்றும் பலர் காயமடைந்த சம்பவங்களைப் பற்றி அவர் எதுவும் குறிப்பிடாதது இணையத்தில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. போராட்டக்காரர்களின் மீது நடந்த வன்முறையைப் பற்றி பேசாமல், ஒருதலைப்பட்சமாக மாணவர்களின் வார்த்தைகளை மட்டுமே சாடியதாக பலர் குற்றம்சாட்டினர்.

அந்த வீடியோவில் பூமி, “நம் நாட்டின் இளைஞர்கள் இப்படிப் பேசுவதில்லை. நம் வீடுகளில் உள்ள பெரியவர்களிடம் நாம் இப்படிப் பேசுவோமா? அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதை நாம் உண்மையிலேயே நாட முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார். கலாச்சாரம் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து என்றும், தரக்குறைவான வார்த்தைகள் அர்த்தமுள்ள உரையாடல்களைத் தடுக்கும் என்றும் அவர் கூறினார்.

இணையவாசிகள், மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறையைப் பற்றி அவர் பேசாதது ஏன் என்று கேள்வி எழுப்பினர். “காவல்துறையின் தாக்குதலால் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர்; அதைப் பற்றி ஏன் பேசவில்லை?” என்று பலர் சமூக ஊடகங்களில் விமர்சித்தனர். இதனால், அவரது கருத்துக்கள் யதார்த்தத்தை உணராதவை என்றும், போராட்டத்தின் உண்மையான பிரச்சனைகளை மறைக்கும் வகையில் உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

தனது செய்தியை நிறைவு செய்யும்போது பூமி, ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்ததுடன், பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் கல்வி போன்ற பிரச்சனைகளை கண்ணியத்துடன் கையாள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆனால், போராட்டக்காரர்களின் குரலைக் கேட்காமல், காவல்துறையின் வன்முறையைப் பற்றி மௌனம் காத்தது அவரது கருத்துக்களை சர்ச்சைக்குரியதாக மாற்றியுள்ளது.

இதையும் படிங்க : சாய் பல்லவி சிங்கிளா? சாய் பல்லவிக்கு எப்போது கல்யாணம் நடக்கும்? அவரே சொன்ன பதில்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com