தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விலகல்… என்ன காரணம்?

IUML Exits DMK Alliance: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

Published on: June 20, 2026 at 5:00 pm

சென்னை, ஜூன் 20 2026 : தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML), அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இதற்கான முடிவு கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீண்டகால அரசியல் நட்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன், தி.மு.க.வுடன் அண்ணாதுரை காலம் முதல் மு.க. ஸ்டாலின் காலம் வரை நீண்டகால நட்பு நீடித்து வந்ததாகவும், அந்த உறவிலிருந்து விலகுவது எளிதான முடிவாக இல்லை என்றும் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் புதிய அரசியல் சூழல் உருவாகி உள்ள நிலையில், கூட்டணியின் எதிர்காலம் குறித்து கட்சியின் பொதுக்குழுவில் ஆலோசனை நடத்தப்பட்டு, தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன் மூலம் பல ஆண்டுகளாக நீடித்து வந்த தி.மு.க.-இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணிக்கு முடிவு ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு மற்றும் புதிய கூட்டணி தொடர்பான முடிவுகளை கட்சித் தலைமையகம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க தமிழ்நாடு சீருடை பணியாளர் வாரிய தலைவர் சந்தீப் மிட்டல்.. முழு விவரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com