TASMAC Bars 100 Metres Rule: டாஸ்மாக் கடைகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் பார்கள் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
TASMAC Bars 100 Metres Rule: டாஸ்மாக் கடைகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் பார்கள் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Published on: November 2, 2026 at 7:54 pm
சென்னை, நவ.2, 2026: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை ஒட்டியோ அல்லது அக்கடைகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள்ளோ பார்கள் அமைக்க அனுமதி அளித்து தமிழக அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் மட்டுமே பார்கள் அமைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. உரிய ஒப்பந்தப்புள்ளி நடைமுறையின் மூலம் பார் நடத்துவதற்கான உரிமங்கள் வழங்கப்படும். வளர்ச்சி மற்றும் நகரமைப்புத் திட்டமிடல் ஆணையங்களின் கீழ் அறிவிக்கப்பட்ட வணிக மற்றும் தொழிற்பேட்டை பகுதிகளுக்கு இந்தத் தொலைவு கட்டுப்பாடு பொருந்தாது.
பார்கள் அமைக்கப்படும் இடம் குறைந்தபட்சம் 20 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருக்க வேண்டும். மேலும், வாடிக்கையாளர்களுக்குக் குடிநீர், கை கழுவும் வசதிகள், மேசை மற்றும் நாற்காலிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மதுபானம் அருந்துவது வெளியே தெரியாத வகையில் மறைப்புத் தடுப்புகளும் அமைக்கப்பட வேண்டும்.
21 வயதுக்குக் குறைவானவர்களைப் பார்களுக்குள் அனுமதிக்கவும், அங்கு பணியமர்த்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுபானத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்த எச்சரிக்கைப் பலகைகளையும் வைக்க வேண்டும். அதேபோல், மலைப்பகுதிகளில் உள்ள ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டப் பகுதிகளில் பார்கள் அமைக்க அனுமதி இல்லை.
இதையும் படிங்க: நகராட்சித்துறை நியமன முறைகேடு வழக்கு.. கே.என்.நேருவின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com