ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்த பராகுவே… துருக்கியை வீழ்த்தி முதல் வெற்றி!

FIFA world Cup 2026 : 2026 கால்பந்து உலகக் கோப்பை ‘டி’ பிரிவு லீக் போட்டியில் துருக்கியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பராகுவே அணி, தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Published on: June 20, 2026 at 1:28 pm

சான்பிரான்சிஸ்கோ, ஜூன் 20 2026: கால்பந்து உலகக் கோப்பை 2026 தொடரின் ‘டி’ பிரிவு லீக் ஆட்டத்தில் துருக்கி மற்றும் பராகுவே அணிகள் சான்பிரான்சிஸ்கோவில் மோதின. முதல் போட்டியில் அமெரிக்காவிடம் 1-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்த பராகுவே, இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் கட்டாயத்தில் களமிறங்கியது.

போட்டி தொடங்கிய 64-வது விநாடியிலேயே பராகுவே வீரர் மதியாஸ் கலர்சா அபாரமாக கோல் அடித்து அணியை முன்னிலை படுத்தினார். இதுவே இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை பதிவான அதிவேக கோலாக அமைந்தது.

இந்நிலையில், முதல் பாதி கூடுதல் நேரத்தில் பராகுவே வீரர் மிகுவேல் அல்மிரோன் புதிய விதிமுறையை மீறியதாக நேரடி சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். இதனால் பராகுவே அணி 10 வீரர்களுடன் மீதமுள்ள ஆட்டத்தை எதிர்கொண்டது.

எனினும், துருக்கி அணி பல தாக்குதல்களை மேற்கொண்ட போதிலும் கோல் அடிக்க முடியாமல் தவறியது. இறுதிவரை சிறப்பாக தற்காப்பு ஆடிய பராகுவே 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த தோல்வியால் துருக்கி அணியின் நாக்அவுட் சுற்று வாய்ப்பு முடிவுக்கு வந்தது.

இதையும் படிங்க உலக குத்துச்சண்டை கோப்பை: ஆறு பதக்கங்கள் உறுதி.. எதிரிகளை துவம்சம் செய்த இந்திய வீரர்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com