உலக குத்துச்சண்டை கோப்பை: ஆறு பதக்கங்கள் உறுதி.. எதிரிகளை துவம்சம் செய்த இந்திய வீரர்கள்!

World Boxing Cup 2026 : உலக குத்துச்சண்டை கோப்பை 2026 தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஆறு பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.

Published on: June 20, 2026 at 12:32 pm

குய்யாங், ஜுன் 20 2026: சீனாவின் குய்யாங் நகரில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை கோப்பை 2026 தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். காலிறுதிப் போட்டிகளில் அபார வெற்றி பெற்ற இந்தியா ஆறு பதக்கங்களை உறுதி செய்துள்ளது.

பெண்கள் பிரிவில் 57 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட பிராச்சி, சீன தைபேயின் ஷிஹ் யி வூவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 51 கிலோ எடைப்பிரிவில் மீனாட்சி, கஜகஸ்தானின் அலுவா பால்கிபெகோவாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தினார். இதேபோல், 48 கிலோ பிரிவில் ஜோதி மற்றும் 85 கிலோ பிரிவில் ஜுக்னூ ஆகியோர் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்று இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்திருந்தனர்.

ஆண்கள் பிரிவில் 70 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கிய தீபக், அஜர்பைஜானின் நபி இஸ்கந்தரோவை ஒருமனதாக 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மேலும், 55 கிலோ எடைப்பிரிவில் நிகில், அஜர்பைஜானின் அமின் மம்மத்சாதாவுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதன் மூலம் இந்தியா உலக குத்துச்சண்டை கோப்பை தொடரில் ஆறு பதக்கங்களை உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்.. பி.வி சிந்து வெளியேற்றம், ஜப்பான் வீராங்கனை வெற்றி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com