CJP removes spokesperson Vijeta Dahiya : “எனக்கு பசித்தது, ஆகையால் பர்கர் சாப்பிட்ட சென்றேன் என டெல்லி போராட்டத்தில் கலந்துகொண்ட கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி செய்தித் தொடர்பாளர் விஜேதா தஹியாவின் பேச்சுகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
CJP removes spokesperson Vijeta Dahiya : “எனக்கு பசித்தது, ஆகையால் பர்கர் சாப்பிட்ட சென்றேன் என டெல்லி போராட்டத்தில் கலந்துகொண்ட கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி செய்தித் தொடர்பாளர் விஜேதா தஹியாவின் பேச்சுகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

Published on: July 21, 2026 at 6:30 pm
புதுடெல்லி, ஜூலை 21, 2026: டெல்லியில் நடைபெற்ற போராட்ட ஊர்வலத்தின் போது, சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில் செய்தித் தொடர்பாளர் விஜேதா தஹியாவின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தின. போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தபோது அவர் ஊர்வலத்தை விட்டு விலகி பர்கர் சாப்பிட்டதாகக் கூறியதும், “எனக்கு பசியாக இருந்தது” என நியாயப்படுத்தியதும், கட்சியின் அடிப்படை விழுமியங்களுக்கு முரணானதாகக் கருதப்பட்டது.
இதையடுத்து, ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) கட்சி செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டு, தஹியாவை செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து நீக்கியது. மேலும், அவரது அனைத்து அதிகாரப்பூர்வ பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
We strongly condemn the deeply insensitive actions of our spokesperson Vijeta Dahiya, whose videos surfaced while peaceful protestors and our team were facing brutal police violence. Such conduct is unacceptable, shows a complete lack of judgment, and is wholly inconsistent with…
— Cockroach is Back (@Cockroachisback) July 21, 2026
அக்கட்சியின் அறிக்கையில், “அமைதியான போராட்டக்காரர்களும் எங்கள் குழுவினரும் காவல்துறையின் கொடூரமான வன்முறையை எதிர்கொண்டிருந்த வேளையில், தஹியாவின் மிகவும் உணர்வற்ற செயல்கள் வெளிப்பட்டன. இத்தகைய நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது; இது சரியான முடிவெடுக்கும் திறன் இல்லாமையைக் காட்டுகிறது” எனக் குறிப்பிடப்பட்டது.
இந்த நடவடிக்கை, கட்சியின் ஒழுங்கு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் எடுக்கப்பட்டதாகவும், இயக்கத்தின் விழுமியங்களுக்கு முரணான எந்தச் செயலையும் கட்சி பொறுத்துக் கொள்ளாது என்பதையும் தெளிவுபடுத்துகிறது. தஹியாவை நீக்கியது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உறுப்பினர்களின் தியாகத்தையும், கட்சியின் அரசியல் நிலைப்பாட்டையும் பாதுகாக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க : மோடி, ஷா, பிரதான் பதவி விலக வேண்டும்.. ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com