Actress Priyanka Chopra: தெலுங்கில் நடிகர் மகேஷ்பாபு உடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நடிகர் அல்லு அர்ஜுனின் படத்தை தவிர்த்து உள்ளார்.
Actress Priyanka Chopra: தெலுங்கில் நடிகர் மகேஷ்பாபு உடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நடிகர் அல்லு அர்ஜுனின் படத்தை தவிர்த்து உள்ளார்.
Published on: April 16, 2025 at 12:11 pm
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. சினிமா துறையை பொருத்தமட்டில் பிரியங்கா சோப்ராவுக்கு தமிழ் படம் தான் அறிமுகம். இளைய தளபதி நடிகர் விஜயுடன் அறிமுகமான இவர், அதன் பின்னர் இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்தார். தற்போது அமெரிக்க ஒருவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
எனினும் நடிகை பிரியங்கா சோப்ரா தொடர்ந்து இந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் கிருத்திக் ரோஷனின் க்ரிஷ்-4 மற்றும் நடிகர் மகேஷ்பாபுவின் படத்தில் நடித்த ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிகர் மகேஷ்பாபு நடிக்கும் தெலுங்கு படத்தை பிரபல இயக்குனர் ராஜமவுலி டைரக்ட் செய்கிறார். இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனின் படம் ஒன்றில் நடித்த பிரியங்கா சோப்ரா மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க : மீண்டும் போலீஸாக விஜயசாந்தி.. காக்கி உடுப்பில் மிடுக்கு.. 10 கிலோ எடை குறைப்பு..!
இதற்கான காரணத்தை நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது வெளிப்படுத்தி உள்ளார். மகேஷ்பாபு மற்றும் கிருத்திக் ரோஷன் ஆகியோரின் படங்களில் நடிக்க நடிகை பிரியங்கா சோப்ரா ஏற்கனவே கால்சீட் வழங்கியுள்ளார். ஆகவே அவரால் இன்னொரு படத்தில் நடிக்க முடியவில்லை. கால்ஷீட் பிரச்சனை காரணமாகத்தான் அல்லு அர்ஜுன் படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்க முடியாமல் போனது. மற்றபடி வேறு ஏதேனும் காரணங்கள் இல்லை” என தெரிவித்துள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுன் அடுத்ததாக டைரக்டர் அட்லி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் நடிக்கத்தான் நடிகை பிரியங்கா சோப்ரா கால்ஷீட் வழங்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்: மும்பை போலீஸ் வழக்குப்பதிவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com