Kara Faces Title Dispute : நடிகர் தனுஷின் கர படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Kara Faces Title Dispute : நடிகர் தனுஷின் கர படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Published on: April 28, 2026 at 3:07 pm
சென்னை, ஏப்.28, 2026: தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கர’ திரைப்படம் தலைப்பு உரிமை சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அதாவது, சேலம் பூவாய் அம்மன் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வேங்கை அய்யனார், ‘கர’ என்ற பெயரை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்ததாகக் கூறியுள்ளார்.
மேலும், ‘கர’ படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. படம் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் வேங்கை அய்யனார், சேலம் பூவாய் அம்மன் படத்தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், 2021-ஆம் ஆண்டே ‘கர’ என்ற தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்தோம் எனக் கூறியுள்ளார். மேலும், அதே பெயரை தனுஷ் நடித்துள்ள படத்தில் பயன்படுத்துவது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும் அச்சம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ‘கர’ என்ற பெயரை மாற்றாமல் படத்தை வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனுஷின் கர படத்தில் நடிகை மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம், சுராஜ் வெஞ்சாரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளது.
மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகளவில் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட ஜேம்ஸ் வசந்தன்.. புஸ்வானமான தற்குறி புகார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com