Adam Zampa: ஹைதராபாத் அணியில் இருந்து காயம் காரணமாக சுழல் பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா விலகி உள்ளார். இது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Adam Zampa: ஹைதராபாத் அணியில் இருந்து காயம் காரணமாக சுழல் பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா விலகி உள்ளார். இது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Published on: April 16, 2025 at 12:41 pm
இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகின்றன. இந்த போட்டிகள், கடந்த காலத்திற்கு சற்றும் குறைவில்லாமல் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் வழங்கி வருகின்றனர். ஸ்கோர் போர்டை பொருத்தமட்டில், இன்று முன்னணியில் இருக்கும் அணிகள் நாளை இரண்டாவது இடத்திற்கும், மூன்றாவது இடத்தில் இருந்த அணி முதலிடத்திற்கும் என மாறி மாறி வருகின்றன.
தற்போது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த நான்கு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கூட, லக்னோ சூப்பர் செயின்ஸ் அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்த அணியின் சுழல் பந்து வீச்சாளராக சிறப்பாக செயல்பட்டு வந்தவர் ஆடம் ஜம்பா. ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த இவர் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். முதல் இரு போட்டிகளில் விளையாடிய ஜம்பா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த நிலையில் இவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
இந்த காயம் காரணமாக அவர் மற்ற போட்டிகளில் விளையாடவில்லை. இந்த நிலையில், எஞ்சிய ஆட்டங்களில் இருந்து ஆடம் ஜம்பா விலகி உள்ளார். இதைத்தொடர்ந்து இவருக்கு பதிலாக கர்நாடகாவைச் சேர்ந்த பேட்ஸ்மேன் ஸ்மரன் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: அஸ்வினை நீக்கியது ஏன்? தோனி கொடுத்த விளக்கம்..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com