Shreyas Iyer: 2025 மார்ச் மாதத்தின் சிறந்த வீரராக ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Shreyas Iyer: 2025 மார்ச் மாதத்தின் சிறந்த வீரராக ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Published on: April 16, 2025 at 1:11 pm
துபாய் ஏப்ரல் 16 2025: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2025 மார்ச் மாதத்தில் சிறந்த கிரிக்கெட் வீரரை அறிவித்துள்ளது. இந்த கௌரவம் இம்முறை ஸ்ரேயாஸ் ஐயருக்கு கிடைத்துள்ளது. விருதுக்குரிய மாதத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்தப் போட்டிகளில் ஒரு அரை சதம் உட்பட 172 ரன்கள் எடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் என்ற கௌரவத்தை வழங்கியுள்ளது. முன்னதாக ஸ்ரேயாஸ் ஐயருடன் போட்டியில் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த வீரர் ரச்சின் ரவீந்தரா மற்றும் ஜேக்கப் டப்பி ஆகியோர் இருந்தனர்.
ஸ்ரேயாஸ் ஐயர் இந்த விருதை பெறுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு ஸ்ரேயாஸ் அய்யர் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற கௌரவத்தை பெற்றார் என்பது நினைவு கூறத்தக்கது.
இதையும் படிங்க: ஹைதராபாத் அணிக்கு பின்னடைவு.. முக்கிய வீரர் விலகல்..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com