Complaint against Minister Ponmudi: குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிராக மாண்பை குறைக்கும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Complaint against Minister Ponmudi: குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிராக மாண்பை குறைக்கும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Published on: April 16, 2025 at 1:27 pm
சென்னை ஏப்ரல் 16 2025: அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் அளித்துள்ளார். அந்த மனுவில், ” அமைச்சர் பொன்முடி குறிப்பிட்ட மதத்தினர் அவமானப்படுத்தி, பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசி உள்ளார்.
அமைச்சர் பொன்முடி மீது 10 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் பொன்முடியின் பேச்சு பெண்களின் மாண்பை குறைக்கும் வகையிலும் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அஸ்வத்தாமன், ” பொன்முடியை கட்சியின் பதவியில் இருந்து நீக்கி உள்ளனர். அது போதாது அவரை அமைச்சரவையில் இருந்தும் நீக்க வேண்டும். இல்லை என்றால் இது தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தில் முறையிடுவோம்” என தெரிவித்தார்.
சமீபத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது விலைமாதருடன் சைவம் மற்றும் வைணவ சமயங்களை ஒப்பிட்டு பேசினார்.
இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதைத்தொடர்ந்து அவர் வகித்து வந்த கட்சி பதவியை பறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாட்டை youtube சேனல்.. சீமான் பரபரப்பு அறிக்கை..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com