Arjun Son of Vyjayanthi IPS: மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிகை விஜயசாந்தி மாஸ் காட்ட உள்ளார். இதற்காக 58 வயதிலும் அவர் 10 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார்.
Arjun Son of Vyjayanthi IPS: மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிகை விஜயசாந்தி மாஸ் காட்ட உள்ளார். இதற்காக 58 வயதிலும் அவர் 10 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார்.
Published on: April 13, 2025 at 1:36 pm
Updated on: April 13, 2025 at 1:43 pm
ஹைதராபாத் ஏப்ரல் 13 2025: அர்ஜுன் சன் ஆப் வைஜெயந்தி என்ற தெலுங்கு படத்தில் நடிகை விஜயசாந்தி ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்திற்காக நடிகை விஜயசாந்தி மீண்டும் காக்கி உடையை அணிகிறார். இதற்காக 58 வயதிலும் தீவிர உடற்பயிற்சிகள் மூலம் தனது எடையை 10 கிலோ வரை குறைத்துள்ளார்.
தெலுங்கு நடிகர் கல்யாண் ராம் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில், நடிகர் கல்யாண் ராமுக்கு அம்மாவாக விஜயசாந்தி நடிக்கிறார். இதற்காக அவர் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் காக்கி உடையை அணிந்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் முன்னோட்ட காட்சிகள் அண்மையில் வெளியாகின. அதில் நடிகை விஜயசாந்தி ஸ்டண்ட் காட்சிகளிலும் நடித்திருப்பது தெரிய வருகிறது.
இந்தப் படத்தில் கண்ணியமான ஓர் கடமை தவறாத காவல் அதிகாரியாக நடிகை விஜயசாந்தி நடித்துள்ளார். 2025 ஏப்ரல் 18ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தில், நடித்தது குறித்து நடிகை விஜயசாந்தி மனம் திறந்து உள்ளார்.
இந்தப் படம் தொடர்பாக நடிகை விஜயசாந்தி அளித்த பேட்டியில், ” முதலில் இந்தப் படத்தில் நடிக்க என்னிடம் கேட்டார்கள்; நான் ஒப்புக் கொள்ளவில்லை. போலீஸ் அதிகாரி என்றால் கட்டுக்கோப்பான உடல்வாகு தேவை.
இதற்காக நான் அவர்களிடம் ஒரு நான்கு மாத அவகாசம் கேட்டேன். அவர்கள் என்னிடம் உடல் எடையை குறைப்பது தொடர்பாக எதுவும் கூறவில்லை. ஆனால் நானாக முயற்சி எடுத்து உடல் எடையை குறைத்தேன்.
வைஜெயந்தி ஐபிஎஸ் என்றால் கட்டுக்கோப்பான உடல்வாகு தேவை; அந்தக் கதாபாத்திரத்திற்கு, கொஞ்சமாவது நியாயம் சேர்க்க வேண்டாமா.. ? இதற்காகத்தான் நான் உடல் எடையை 10 கிலோ வரை குறைத்தேன்” என்றார்.
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயசாந்தி. இவரின் நடிப்பில் 90களில் வெளியான வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற கதாபாத்திரம் அவரை லேடி சூப்பர் ஸ்டார் ஆக உயர்த்தியது.
இவர் ரஜினிகாந்த் உடன் மன்னன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவரின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. பின் நாட்களில் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த நடிகை விஜயசாந்தி, 2020 ஆம் ஆண்டு மகேஷ்பாபு நடிப்பில் வெளியான, ‘சரி லேரு நீக்கெவரு’ என்ற படத்தில் கதாநாயகனுக்கு தாயாராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குழந்தை பெறுவதும், கணவனுக்கு இன்பம் கொடுப்பது மட்டுமல்ல.. பிரபல நடிகை ஓபன் டாக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com