Actress Neena Gupta: பாலுறவு என்பது கணவனுக்கு இன்பம் கொடுப்பதும்; குழந்தைகள் பெற்றுக் கொள்வது மட்டுமல்ல. அது.. என ஓப்பனாக பேசி உள்ளார் பிரபல நடிகை.
Actress Neena Gupta: பாலுறவு என்பது கணவனுக்கு இன்பம் கொடுப்பதும்; குழந்தைகள் பெற்றுக் கொள்வது மட்டுமல்ல. அது.. என ஓப்பனாக பேசி உள்ளார் பிரபல நடிகை.
Published on: April 6, 2025 at 11:13 am
பாலிவுட் சினிமாவில் 1990களில் அறிமுகம் ஆகி, நடிகையாக ஒரு ரவுண்ட் வந்தவர் நீனா குப்தா. திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த நீனா குப்தா, தற்போது சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களை இயக்கி நடித்தும் வருகிறார்.
இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பாலுறவு குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார். அப்போது, “பொதுவாகவே இந்திய பெண்களுக்கு பாலுறவு குறித்த புரிதல் பெரிய அளவு இல்லை” என கூறினார். தொடர்ந்து பேசிய நீனா குப்தா,” நீங்கள் பெண்ணாக பிறந்தால் மகிழ்ச்சி கொள்ளுங்கள்; உங்களின் முதல் தேவை உங்களுக்கு தேவையான நல்ல ஆண்மகனை தேர்வு செய்வது ஆகும்.
இந்த விஷயத்தில் ஒவ்வொரு பெண்ணும் கவனம் கொள்ளுங்கள். முத்தமிட்டால் குழந்தை பிறக்கும் என்று எண்ணிய பல பெண்களில் நானும் ஒருவர். உலக அளவில் ஒப்பிடும்போது இந்திய பெண்களுக்கு பாலுறவு குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை” என்றார்.
மேலும், “95 சதவீத பெண்களுக்கு பாலுறவு என்பது இன்பத்திற்கானது” என்ற புரிதல் இல்லை எனக் கூறிய நீனா குப்தா, “இந்தியாவில் உள்ள பல பெண்கள் பாலுறவு என்பது கணவனுக்கு இன்பம் கொடுப்பது என்றும் குழந்தை பெற்றுக் கொள்வது என்றும் நினைக்கின்றனர்.
ஆனால் சில பெண்கள் மட்டுமே பாலுறவு என்பது இருவருக்குமான இன்பம் என்பதை புரிந்து கொள்கின்றனர். அந்த வகையில் பெண்கள் மற்றும் அவர்களின் பாலுறவு ஆசை குறித்து எனக்கு மிகப்பெரிய வருத்தம் உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: பிரபல நடிகைக்கு சிக்னல் கொடுத்த காமெடி நடிகர்.. யார் அவர்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com