Waqf Amendment Bill: மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் மூன்று நாள்கள் தீவிர விவாதத்திற்குப் பிறகு இந்த மசோதா நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
Waqf Amendment Bill: மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் மூன்று நாள்கள் தீவிர விவாதத்திற்குப் பிறகு இந்த மசோதா நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
Published on: April 6, 2025 at 12:19 pm
புதுடெல்லி, ஏப்.6 2025: ஜனாதிபதி திரௌபதி முர்மு வக்ஃப் திருத்தச் சட்டம் 2025-க்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் சனிக்கிழமை (ஏப்ரல் 5, 2025) தெரிவித்துள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 3 நாட்கள் நடைபெற்ற தீவிர விவாதத்திற்குப் பிறகு இந்த மசோதா நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
அரசியலமைப்பு கொள்கைகளை மீறுவதாகக் கூறி, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் எம்பி முகமது ஜாவேத் மற்றும் அசாதுதீன் ஓவைசி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் இந்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், திருத்தப்பட்ட சட்டம் முஸ்லிம்களின் மத நடைமுறைகளில் தலையிடுவதாக அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்தது. முன்னதாக, புதன்கிழமை (ஏப்.2 2025) மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, வக்ஃப் – ஒரு தொண்டு நிறுவனம் – மற்றும் வக்ஃப் (நன்கொடையாளர்) முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருக்க முடியும் என்று கூறியிருந்தார்.
முஸ்லிம் அல்லாதவர்கள் நிர்வாக நோக்கங்களுக்காக வக்ஃப் வாரியம் அல்லது கவுன்சிலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதுவும் எந்தவொரு வக்ஃப் நன்கொடையும் அதன் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக என்றார்.
தொடர்ந்து, அமித் ஷா, “இந்தச் சட்டம் அவர்களின் [முஸ்லிம்] மத நடைமுறைகள் மற்றும் நன்கொடையின் தன்மையில் தலையிடும் என்று குழப்பத்தை பரப்ப முயற்சி நடக்கிறது. வாக்கு வங்கியை உருவாக்க இதுபோன்ற பயமுறுத்தல் செய்யப்படுகிறது” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Waqf Amendment Bill: வக்ஃப் திருத்த மசோதாவுக்கு ஆதரவு ஏன்? ஜே.டி.யூ பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com