Justice Yashwant Varma: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி யஷ்வந்த் வர்மா சனிக்கிழமை (ஏப்.5 2025) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Justice Yashwant Varma: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி யஷ்வந்த் வர்மா சனிக்கிழமை (ஏப்.5 2025) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Published on: April 6, 2025 at 12:32 pm
புதுடெல்லி, ஏப்.6 2025: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவியேற்றார். இவரின் வீட்டில் பெரும் தொகை பணம் எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.
நீதிபதி யஷ்வந்த் வர்மா, சனிக்கிழமை (ஏப்.5 2025) அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக சாதாரணமாக பதவியேற்றார். நீதிபதி வர்மா மீது உள் விசாரணை தொடரும் வரை அவருக்கு எந்த நீதித்துறைப் பணியும் ஒதுக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் பிறகு, நீதிபதி வர்மா சீனியாரிட்டியில் ஆறாவது இடத்தில் உள்ளார். முன்னதாக, நீதிபதி வர்மாவுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அப்போது, மூன்று பேர் கொண்ட குழு இந்த விவகாரத்தை விசாரித்து வருவதாகவும், விசாரணை முடிந்த பிறகு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தது. மார்ச் 14 அன்று, நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டின் வெளிப்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த நேரத்தில், நீதிபதி வர்மா வீட்டில் இல்லை.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து எரிந்த நிலையில் பணக் குவியல் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.
இதையும் படிங்க : டெல்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்: வீடியோ வெளியீடு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com