Actress Pragathi: பிரபல நடிகைக்கு காமெடி நடிகர் ஒருவர் சிக்னல் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை பாதிக்கப்பட்ட நடிகை தற்போது தெரிவித்துள்ளார்.
Actress Pragathi: பிரபல நடிகைக்கு காமெடி நடிகர் ஒருவர் சிக்னல் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை பாதிக்கப்பட்ட நடிகை தற்போது தெரிவித்துள்ளார்.
Published on: April 4, 2025 at 5:01 pm
இந்திய சினிமாக்களில் பாலியல் புகார்கள் அவ்வப்போது தலை காட்டுவது உண்டு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இதுபோன்ற பாலியல் புகார்கள் கேரள திரையுலகத்தை புரட்டி போட்டன. இந்த பாலியல் புகார்களால் கேரள திரைப்படச் சங்கம் முற்றிலுமாக கலைக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
இந்த நிலையில் காமெடி நடிகர் ஒருவர் மீது நடிகை பிரகதி தற்போது குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார். அந்த குற்றச்சாட்டில், ” படப்பிடிப்பின் போது காமெடி நடிகர் ஒருவர் தனக்கு தவறாக சிக்னல் கொடுத்தார்” என தெரிவித்துள்ளார்.
சிக்னல் கொடுத்த காமெடி நடிகர்
இது தொடர்பாக பேசிய நடிகை பிரகதி, ” தனக்கு தவறாக சிக்னல் கொடுத்த காமெடி நடிகர் யார் என்பதை வெளிப்படையாக கூற மறுத்து விட்டார். படப்பிடிப்பு தளத்தில் காமெடி நடிகர் தவறாக சிக்னல் கொடுத்துள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத நடிகை பிரகதி, சம்பந்தப்பட்ட காமெடி நடிகரை அழைத்துச் சென்று, நான் உங்களுக்கு ஏதேனும் தவறாக இதுபோன்று சிக்னல் கொடுத்தேனா? என் மீது ஏதேனும் தவறுகள் உள்ளதா? நீங்கள் ஏன் இவ்வளவு கீழ்தரமாக நடந்து கொண்டீர்கள். படப்பிடிப்பு கெட்டுவிடக் கூடாது என்பதற்காக நான் அமைதியாக இருந்தேன். இது போன்ற செயல்களில் யாரிடமும் ஈடுபட வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
நடிகை பிரகதி கே பாக்யராஜின் வீட்ல விசேஷங்க என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஆவார். இந்தப் படத்திற்குப் பிறகு பெரிய மருது, சும்மா இறங்க மச்சான், வாழ்க ஜனநாயகம், கெத்து, தாரை தப்பட்டை மற்றும் ஜெயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிரகதி தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: தளபதி விஜயின் ஆல் டைம் ஃபேவரைட் படங்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com