Veera Dheera Sooran OTT Release: விக்ரமின் அதிரடித் திரைப்படமான வீர தீர சூரன் பகுதி – 2 ஒடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
Veera Dheera Sooran OTT Release: விக்ரமின் அதிரடித் திரைப்படமான வீர தீர சூரன் பகுதி – 2 ஒடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
Published on: April 13, 2025 at 1:47 pm
வீர தீர சூரன் ஒடிடி வெளியீடு: விக்ரம் நடிப்பில், எஸ்.யு. அருண் குமார் இயக்கத்தில் ரியா ஷிபுவால் ஹெச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பில் உருவான படம் வீர தீர சூரன். இந்தப் படத்தில், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், பிருத்வி ராஜ் மற்றும் மலையாள நட்சத்திரம் சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்தப் படம் நடிகர் விக்ரமின் தொடர்ச்சியான மந்தமான பயணங்களுக்குப் பிறகு, ரசிகர்களின் இதயங்களை மீண்டும் வென்றுள்ளது. படத்தில் சீயான் விக்ரமின் அற்புதமான நடிப்பு மிகப்பெரிய பலமாகும். முன்னதாக படம் வெளியீட்டிற்கு முன் சில சிக்கல்கள் இருந்தன. இருப்பினும், படம் பாக்ஸ்ஆபிஸில் வெற்றி பெற்றது. படமானது முதல் இரு வாரத்தில் மட்டும் ₹40.75 கோடி இந்தியாவில் வசூலித்தது.
மேலும், படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமாரின் இசை ப்ளஸ் ஆக உள்ளது. இந்த நிலையில், படம் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்ற தகவலை தயாரிப்பாளர்கள் இதுவரை பகிரவில்லை. எனினும், வீர தீர சூரன் 2025 ஏப்ரல் கடைசி வாரத்தில் ஒடிடி தளத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அப்போது, எந்த ஓடிடி தளம் என்பது குறித்த தகவல்கள் வெளியாகும்.
இதையும் படிங்க : மீண்டும் போலீஸாக விஜயசாந்தி.. காக்கி உடுப்பில் மிடுக்கு.. 10 கிலோ எடை குறைப்பு..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com