Seyon: ‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
Seyon: ‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Published on: May 6, 2026 at 6:17 pm
Updated on: May 6, 2026 at 6:25 pm
சென்னை, மே 6, 2026: ‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கும் இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது; முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஒரே கட்டமாக மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் முழு படப்பிடிப்பும் நடைபெற உள்ளன.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். பாக்யஸ்ரீ போஸ் நாயகியாக இணைந்துள்ளார்; அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் அறிமுக வீடியோவில், அக்டோபரில் வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 7ஆம் நூற்றாண்டு காவியம்.. ரூ.100 கோடி பட்ஜெட்.. மர்மயோகி என்னாச்சு? திரிஷா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com