Actor Salman Khan: நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Actor Salman Khan: நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Published on: April 14, 2025 at 1:14 pm
மும்பை, ஏப்.14 2025: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை போக்குவரத்து காவல்துறையின் வொர்லியில் உள்ள வாட்ஸ்அப் எண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.13 2025) அதிகாலை பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் ஒரு கொலை மிரட்டல் வந்தது.
அந்த மிரட்டலில், ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் சல்மான் கானின் வீட்டிற்குள் நுழைந்து அவரைக் கொலை செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், நடிகர் சல்மான் கானின் வாகனத்தில் வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்யப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அந்தச் செய்தியில் நடிகரை நிச்சயமாகக் கொன்றுவிடுவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது” என்றார். மேலும், இந்த மிரட்டல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
1998 ஆம் ஆண்டு பிளாக்பக் மான் வேட்டை நடந்தது. இந்த வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோயின் ஹிட் லிஸ்டில் ஏற்கனவே சல்மான் கான் இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில், சல்மான் கானுக்கு சமீபத்திய நாள்களில் மிரட்டல்கள் தொடர்ந்து வருகின்றன.
இதற்கிடையில், கடந்த ஆண்டு (2024) ஏப்ரல் மாதம் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கானின் பாந்த்ரா வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்தத் தாக்குதலுக்கு லாரன்ஸின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றார். லாரன்ஸ் பிஷ்னோய் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மும்பை காவல்துறை பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மீண்டும் போலீஸாக விஜயசாந்தி.. காக்கி உடுப்பில் மிடுக்கு.. 10 கிலோ எடை குறைப்பு..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com