அம்மா அம்மாதான்.. உருகிய ரசிகர்கள்.. விஜய் ஆண்டனியின் நூறு சாமி படப் பாடல் வெளியீடு!

Vijay Antony’s Noor Sami movie : தாயின் அன்பை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளன; இந்தப் பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே யூ-ட்யூப்டில் ஆயிரக்கணக்கான பார்வைகள் பெற்றுள்ளது.

Published on: May 1, 2026 at 8:56 pm

சென்னை, மே 1, 2026: விஜய் ஆண்டனியின் “நூறு சாமி” படத்தின் இரண்டாவது பாடல் “அம்மா அம்மாதான்” மே 1, 2026 அன்று வெளியிடப்பட்டது. பாடலை ஸ்ரீகாந்த் ஹரிஹரன் பாடியுள்ளார்; இசையை பாலாஜி ஸ்ரீராம் அமைத்துள்ளார்.
பாடலின் வரிகளை மோகன் ராஜன் எழுதியுள்ளார். இந்தப் பாடல் 1 மே 2026 அன்று வெளியானது. பாடல் லிரிக் வீடியோ வடிவில் யூ-ட்யூப் தளத்தில் வெளியாகியுள்ளது.

நூறு சாமி திரைப்படத்தை சசி இயக்கிவருகிறார். இவர் இதற்கு முன்பு, பிச்சைக்காரன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இந்நிலையில் நூறு சாமி திரைப்படத்தில் நாயகனாக விஜய் ஆண்டனியும், நாயகியாக ஸ்வாசிகாவும் நடித்துள்ளனர்.

இவர்கள் தவிர லிஜோமோல் ஜோஸ், அஜய் திஷன், காவ்யா அனில், கருணாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்; இப்படத்தின் கதை கிராமப்புறத்தில் தாய் தனது பிள்ளைகளை வளர்ப்பதற்காக நடத்தும் பாசப்போராட்டம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெளியாகியுள்ள நூறுசாமி படத்தின் அம்மா அம்மாதான் பாடல் தாயின் பாசம், அழகும், அன்பும் பிரதிபலிக்கும் உணர்ச்சி மிக்க பாடலாக உருவாகியுள்ளது.

இதையும் படிங்க : மைக்கேல் சாதித்ததா? சறுக்கியதா? முதல் வார கலெக்ஷன்ஸ் எவ்வளவு?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com