மைக்கேல் சாதித்ததா? சறுக்கியதா? முதல் வார கலெக்ஷன்ஸ் எவ்வளவு?

Michael India box office : மைக்கேல் ஜாக்சன் பயோபிக் படமான மைக்கேல் இந்தியாவில் முதல் வாரத்தில் ரூ.26 கோடிகள் வரை வசூலித்துள்ளது.

Published on: May 1, 2026 at 11:52 am

சென்னை, மே 1, 2026: மறைந்த பாப் நட்சத்திரத்தின் மருமகன் ஜாஃபர் ஜாக்சன் நடித்துள்ள, அன்டோயின் ஃபூக்வாவின் மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மைக்கேல்’, இந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படம் உலகளவில் வலுவான தொடக்கத்தைப் பெற்றது; அந்த வகையில் இந்தியாவில் முதல் வாரத்தில் ₹26 கோடியை வசூலித்துள்ளது.

இது தொடர்பாக, சாக்னில்க் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, ‘மைக்கேல்’ திரைப்படம் வெளியான ஏழாவது நாளில் ₹2.50 கோடி வசூலித்துள்ளது, இதில், புதன்கிழமை வசூலான ₹2.40 கோடியை விட, வியாழக்கிழமை வசூல் சற்று அதிகமாகும். இதன் மூலம், இந்தியாவின் மொத்த வசூல் இதுவரை ₹31.19 கோடியாகவும், நிகர வசூல் ₹26.05 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், வார இறுதியில் ‘மைக்கேல்’ படத்தின் வசூல் அதிகரித்தது; சனிக்கிழமை ₹5.25 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ₹5.85 கோடியும் வசூலித்தது. திங்கட்கிழமை, வசூலில் சரிவைக் கண்டு ₹2.25 கோடியை மட்டுமே வசூலித்தது. ‘மைக்கேல்’ திரைப்படம், பாலிவுட் வெளியீடுகளான ‘பூத் பங்களா’ மற்றும் ‘துரந்தர் 2’ ஆகியவற்றிலிருந்து கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? வெளியான புதிய தகவல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com