Jananayagan: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் ஜனநாயகன் திரைப்படம் மே 7ஆம் தேதி வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Jananayagan: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் ஜனநாயகன் திரைப்படம் மே 7ஆம் தேதி வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: April 30, 2026 at 9:17 pm
சென்னை, ஏப்.30, 2026: தவெக தலைவர் மற்றும் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கியுள்ளார். இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் முதலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடத் திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ராணுவம் மற்றும் மத நல்லிணக்கம் தொடர்பான காட்சிகள் காரணமாக, தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் படம் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பப்பட்டது.குழு படம் பார்த்துவிட்டாலும், இன்னும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதற்கிடையில், ஜனநாயகன் படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது. இது படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், தற்போது, படத்துக்கு விரைவில் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, மே 7-ஆம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது எனக் கூறப்படுகிறது. இது குறித்து, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், “ஜனநாயகன் மே 7-ல் வெளியாக வாய்ப்பு உள்ளது. படம் எப்போது வந்தாலும் ரசிகர்கள் அதை உற்சாகமாக வரவேற்பார்கள்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : நடிகை சமந்தாவின் தெலுங்கு படம்.. மா இன்டி பங்காரம் ரிலீஸ் தள்ளிப் போகிறதா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com