கால்பந்து ஆடிய மோடி.. வியந்து பாராட்டிய ஃபிபா தலைவர் ஜியானி!

Narendra Modi: கால்பந்து விளையாட்டின் மீதான பிரதமர் நரேந்திர மோடியின் ஆர்வத்தைப் ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ பாராட்டினார்.

Published on: April 30, 2026 at 9:26 pm

புதுடெல்லி, ஏப்.30, 2026: கால்பந்து விளையாட்டின் மீதான பிரதமர் நரேந்திர மோடியின் ஆர்வத்தைப் ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ பாராட்டினார்.

ஃபிஃபா தலைவர் ஜியானி இன்பாண்டினோ, பிரதமர் நரேந்திர மோடியின் விளையாட்டு பற்றிய ஆர்வத்தை பாராட்டினார். அதாவது, அவர், காங்க்டோக் நகரில் குழந்தைகளுடன் பிரதமர் மோடி கால்பந்து விளையாடும் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். “கால்பந்து உலகை உண்மையிலேயே ஒன்றிணைக்கிறது” என்ற வாசகத்துடன் அந்தப் புகைப்படத்தை வெளியிட்டார்.

வடகிழக்கு மாநிலங்களில் கால்பந்து மிகுந்த பிரபலமுடையது. சிக்கிம், மிசோரம், மணிப்பூர், மேகாலயா போன்ற மாநிலங்களில், கிரிக்கெட்டைவிட கூட அதிக ஆர்வத்துடன் கால்பந்து விளையாடப்படுகிறது.
இது முதல் முறையல்ல; ஃபிஃபா தலைவர், பிரதமர் மோடியின் விளையாட்டு ஆர்வத்தை முன்பும் பாராட்டியுள்ளார். 2018 டிசம்பரில் அர்ஜென்டினாவில் நடந்த G-20 மாநாட்டில், பிரதமர் மோடிக்கு அவரது பெயர் பொறிக்கப்பட்ட தனிப்பட்ட கால்பந்து ஜெர்சியை பரிசளித்தார்.

பிரதமர் மோடி சிக்கிம் மாநிலம் காங்க்டோக்கில் இரு தினங்களுக்கு முன்பு இளம் வீரர்களுடன் கால்பந்து விளையாடினார். இது தொடர்பான காணொலிகள் இணையத்தை ஆக்கிரமித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சகோதரி எலும்பு கூடுடன் சென்ற நபர்.. பணத்தை ஒப்படைத்த வங்கி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com