நடிகை சமந்தாவின் தெலுங்கு படம்.. மா இன்டி பங்காரம் ரிலீஸ் தள்ளிப் போகிறதா?

Maa Inti Bangaram : சமந்தா ரூத் பிரபு தற்போது தனது அடுத்த வெளியீடான ‘மா இன்டி பங்காரம்’ படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படம் மே 15 அன்று வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டு இருந்தது.

Published on: April 30, 2026 at 8:22 pm

ஹைதராபாத், ஏப்.30, 2026: நடிகை சமந்தா ரூத் பிரபுவின் அடுத்த படம் ‘மா இன்டி பங்காரம்’ மே 15 வெளியீடு என அறிவிக்கப்பட்டிருந்து. எனினும், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் காரணமாக வெளியீட்டு தேதி தள்ளிப்போகும் வாய்ப்பு அதிகம் என செய்திகள் தெரிவிக்கின்றன. தயாரிப்பாளர்கள் ஜூன் 4-ஆம் தேதி, ஐ.பி.எல் முடிவடைந்த பின், படத்தை வெளியிட பரிசீலித்து வருகின்றனர்.

எனினும், இதுவரை தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. அதாவது, ஐ.பி.எல் உச்சக்கட்ட பார்வையாளர் எண்ணிக்கையுடன் படம் மோதுவதைத் தவிர்க்க, வெளியீட்டை தள்ளிப் போட வேண்டும் என பரிந்துரை மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல் போட்டிகளை பொறுத்தவரை, மே மாதத்தில் நடைபெறும் பிளேஆஃப்ஸ் மற்றும் இறுதிப் போட்டிகள் பார்வையாளர்களின் கவனத்தை முழுமையாக ஈர்க்கும். இதனால், புதிய படங்களுக்கு திரையரங்க வருகை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சமந்தா படம் தள்ளிப்போகும் எனத் தெரிகிறது. இதற்கிடையில், சமந்தா சமீபத்தில் தனது பிறந்தநாளில் மா இன்டி பங்காரம் படத்துடன் தொடர்புடைய கேக் வெட்டி கொண்டாடினார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : 28 ஆண்டுகள் காத்திருப்பு.. மீண்டும் தபு-நாகர்ஜுனா.. ரசிகர்கள் குஷி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com