Ajith’s Racing Journey Unveiled : அஜித் குமார் வாழ்க்கை மற்றும் ரேஸ் பயணத்தை மையமாகக் கொண்ட ஆவணப்படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ மே 1, 2026 அன்று வெளியிடப்பட்டது.
Ajith’s Racing Journey Unveiled : அஜித் குமார் வாழ்க்கை மற்றும் ரேஸ் பயணத்தை மையமாகக் கொண்ட ஆவணப்படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ மே 1, 2026 அன்று வெளியிடப்பட்டது.

Published on: May 1, 2026 at 8:58 pm
சென்னை, மே 1, 2026: நடிகர் அஜித் குமார் வாழ்க்கை மற்றும் ரேஸ் பயணத்தை மையமாகக் கொண்ட ஆவணப்படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ மே 1, 2026 அன்று வெளியிடப்பட்டது.
இது, “Gladiators – In Pursuit of Challenges” எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது. இந்த ஆவணப்படம், அஜித்தின் சர்வதேச மோட்டார் ரேசிங் பயணத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
இந்த ஆவணப் படத்தை ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார்; படத்தை, அஜித் குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் எல்.எல்.சி நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த ஆவணப் படத்துக்கு, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த முழுநீள ஆவணப்படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த ஆவணப் படத்தில், நடிகர் அஜித் குமார், ஆசியன் லீ மான்ஸ் சீரிஸ் மற்றும் 24 ஹச் சீரிஸ் போன்ற சர்வதேச ரேஸிங் போட்டிகளில் பங்கேற்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதற்கிடையில், “சினிமாவில் ரீடேக் கிடைக்கும்; ஆனால் ரேசிங்கில் தவறுக்கு இடமில்லை” என்ற அஜித்தின் உரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
அஜித் பிறந்தநாள்
இந்த நிலையில், மே 1, 2026 அன்று அஜித்தின் 55வது பிறந்தநாளில் வெளியானதால், ரசிகர்கள் சமூக ஊடகங்களில் #Gladiators ஹாஷ்டேக் மூலம் பெரிதும் பகிர்ந்து வருகின்றனர்.
யூ-ட்யூப் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக வெளியிடப்பட்ட வீடியோ, அஜித்தின் மோட்டார் ரேசிங் மீது கொண்ட ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க : ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? வெளியான புதிய தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com