Nadpudan Ungalode Helpline for NEET : நீட் தேர்வு மன ஆலோசனை திட்டமான நட்புடன் உங்களோடு தொடங்கப்பட்டுள்ளது.
Nadpudan Ungalode Helpline for NEET : நீட் தேர்வு மன ஆலோசனை திட்டமான நட்புடன் உங்களோடு தொடங்கப்பட்டுள்ளது.

Published on: May 1, 2026 at 11:26 pm
சென்னை, மே 1, 2026: தமிழ்நாடு அரசு நீட் தேர்வை முன்னிட்டு மாணவர்களின் மனநலத்தை பாதுகாக்க ‘நட்புடன் உங்களோடு’ திட்டத்தின் கீழ் 24 மணி நேர இலவச தொலைபேசி ஆலோசனை சேவையை தொடங்கி உள்ளது.
இதில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 14416 அல்லது 104 என்ற எண்களில் அழைத்து மனநல ஆலோசனையை பெறலாம். இதில், பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைகள் வழங்குவார்கள்.
இந்தச் சேவை, முற்றிலும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம், மன அழுத்தம் குறைக்கும் வழிகாட்டுதல் ஆகும்.
மேலும், பயத்தை சமாளிக்கும் உத்திகள் மற்றும் தேர்வு தயாரிப்பில் கவனம் செலுத்தும் ஆலோசனைகள் ஆகியவை வழங்கப்படும். இது தவிர குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொள்ள பெற்றோருக்கும் வழிகாட்டுதல் வழங்கப்படும்.
நீட் தேர்வு
Dear NEET Aspirants,
— National Testing Agency (@NTA_Exams) April 26, 2026
Your mental health and well-being are our top priority. No examination is more important than your life.
If you are feeling stressed, anxious, or overwhelmed, please reach out immediately to these official helplines:
Tele-MANAS (24×7 National Mental Health…
இந்திய அளவில் 22.79 லட்சம் மாணாக்கர்கள் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள்; இந்நிலையில், தமிழ்நாட்டில் 1.5 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், “ஒரு தேர்வு வாழ்க்கையை விட முக்கியமல்ல” என்ற செய்தியை வலியுறுத்தி, மாணவர்களின் நலனைக் காக்கும் முயற்சியாக இது தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அமெரிக்காவில் இருந்து நாடு திரும்புங்கள்.. பாரத மாதாவுக்கு நீங்கள் தேவை.. ஸோகோ ஸ்ரீதர் வேம்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com